பார்லி.யில் நேற்று

Added : மார் 20, 2020
Share
Advertisement

5,000 வழக்குகள் சி.பி.ஐ., பதிவு

சி.பி.ஐ., கடந்த, 2015, ஜன., 1ம் தேதி முதல், கடந்த மாதம், 29ம் தேதி வரை, 4,985 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதில், 4,717 வழக்குகளில் விசாரணை நடத்தியுள்ளது. 3,700 வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. - ராஜ்யசபாவில், பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், ஜிதேந்திர சிங்.

---

சட்டத்தை மதித்து
நடக்க வேண்டும்

எம்.பி.,க்கள், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். விசாரணை அமைப்புகள், ஆஜராக கோரி, 'சம்மன்' அனுப்பினால், அதை, எம்.பி.,க்கள் அலட்சியபடுத்த கூடாது. சட்டத்தை மதித்து நடக்க வேண்டியது நம் கடமை. பார்லி., கூட்டம் நடப்பதை, காரணம் காட்ட கூடாது.

- ராஜ்யசபாவில், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு.

---

ரூ. 6.16 லட்சம் கோடி
முதலீட்டுக்கு ஒப்புதல்

பிரதம மந்திரி நகர்புற வீட்டு வசதி திட்டத்தில், 6.16 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மத்திய அரசு, 1.65 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி செய்யவும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

- லோக்சபாவில், நகர்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி.
அபராத உயர்வால்
விபத்துக்கள் குறைந்தன

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடங்கு உயர்த்தபட்டது. இது, கடந்த ஆண்டு, செப்., 1ல் அமலுக்கு வந்தது. அதன்பின், சாலை விபத்துகள், 10 சதவீதம் குறைந்துள்ளன. கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் மட்டுமே, சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

- லோக்சபாவில், சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி.



---

90 சதவீதம்
மக்களுக்கு ஆதார்

நாட்டில், 90 சதவீதம் மக்களுக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களின் நிதி நிலைமை பற்றி, எந்த கணக்கும் நடத்தப்படவில்லை. அதனால், அது பற்றிய தகவல்கள் இல்லை

- ராஜ்யசபாவில், தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், சஞ்சய் தோத்ரே.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X