பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளுக்கும் 'செக்!' 'கொரோனா'வை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு :விளையாட்டு மைதானங்களிலும் 'உலா' வரத் தடை

Added : மார் 20, 2020
Share
Advertisement
 கடைகளுக்கும் 'செக்!' 'கொரோனா'வை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு :விளையாட்டு மைதானங்களிலும் 'உலா' வரத் தடை

உடுமலை:'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடுமலை நேதாஜி மைதானம் மூடப்பட்டது. நகரில், மளிகை, காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர, மற்ற கடைகளை மூட நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே, மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை, திருமூர்த்தி, அமராவதி சுற்றுலா தலங்கள், நீச்சல் குளம், வனப்பகுதியிலுள்ள கட்டளை மாரியம்மன் கோவில் என, பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.நகராட்சி, தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்களில், தண்ணீர், சோப் ஆயில் வைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் வரத்து குறைவு காரணமாக, வழித்தடங்களில் இயங்கி வந்த, 27 பஸ்கள் நிறுத்தப்பட்டன. அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு, முக கவசம் வழங்கப்பட்டு, அதை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.மைதானத்திற்கு பூட்டு :உடுமலை, நேதாஜி விளையாட்டு மைதானத்தில், காலை, மாலை நேரங்களில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வர். மேலும், ஹாக்கி, வாலிபால், புட்பால், கிரிக்கெட் என, ஏராளமான விளையாட்டு பயிற்சிகளும், மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அதிகளவு மாணவர்கள் விளையாட்டு பயிற்சிக்கு வரத்துவங்கினர். இதனையடுத்து, நேற்று நேதாஜி மைதானம் பூட்டப்பட்டது.கடைகள் மூட உத்தரவு:நோய் தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூர் மாவட்டத்தில், அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நிறுவனங்களில், புதிதாக ஊழியர்கள் நியமிக்க கூடாது. ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மருந்துவமனை, மருந்து கடைகள், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், பேக்கரி, ஓட்டல்களை தவிர்த்து, பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், மால்கள், வணிக வளாகங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள், வரும், 31 வரை தற்காலிக விடுமுறை அளித்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மூடப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.நகராட்சி நோட்டீஸ்!மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, நேற்று நகராட்சி சார்பில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் ஈடுபடாத மற்ற கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, இன்று முதல் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நிறுவனங்களில், கை களை கழுவுவதற்கு தண்ணீர், சோப் ஆயில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதே போல், குறிப்பிட்ட இடைவெளியில் கிருமி நாசினி தெளிக்க, நகராட்சி சார்பில், நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X