சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சிக்கன் 65' இலவசம் கொரோனா விழிப்புணர்வு

Added : மார் 20, 2020
Share
Advertisement



கண்டமங்கலம், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிக்கன் கடை உரிமையாளர் பொதுமக்களுக்கு இலவமாக சுடச்சுட 'சிக்கன் 65' வழங்கினார். அதை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

கொரோனா வைரஸ் பீதியால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. கொரோனா வைரஸ், கோழி இறைச்சியில் இருந்து பரவுவதாக, தகவல் பரவியது. இதனால் மக்கள் கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து, மீன் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

இதன்காரணமாக, கோழி இறைச்சி விற்பனை சரிந்ததால், பண்ணை உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிக்கன் மற்றும் முட்டை விலை குறைந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி சுல்தான்பேட்டையில் சிக்கன் மற்றும் மளிகை மொத்த வியாபாரம் செய்து வரும் நசீர்அகமது என்பவர், கோழி இறைச்சியால் கொரோனா வைரஸ் பரவவில்லை என்பதை, பொது மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதற்காக, புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனது கடை முன்பு, 'சிக்கன் 65 இலவசம்' என்ற அறிவிப்பு செய்திருந்தார். அதையறிந்த பொதுமக்கள் ஏராளமானோர், நேற்று அந்த கடை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இலவசமாக 'சிக்கன் 65' வாங்கி ருசி பார்த்தவர்கள், 50 ரூபாய்க்கு 30 முட்டைகளை முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X