பொது செய்தி

இந்தியா

'இது கொரோனா அல்ல; கர்மா' கவர்னர் கிரண்பேடி கருத்து

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (72)
Share
Advertisement
 'இது, கொரோனா, அல்ல;, கர்மா', கவர்னர் ,கிரண்பேடி, கருத்து

புதுச்சேரி :'இது கொரோனா அல்ல; கர்மா' என, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா குறித்து புதுச்சேரி கவர்னர் சமூக வலைதளத்தில் 'கார்ட்டூன்' ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மனிதர்கள் சிறைக் கூண்டுக்குள் முக கவசம் அணிந்தபடி சிக்கிக்கொண்டு இருக்க, விலங்குகள் அனைத்தும் சுதந்திரமாக சுற்றி வருகின்றன. அதன் கீழ், 'இது கொரோனா அல்ல; கர்மா' என்று வாசகம் இடம்பெற்றுள்ளது.


latest tamil news
அதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில், 'எதை நாம் சாப்பிடுகின்றோம் என்ற பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது.. யாருக்கும் தீங்கு விளைவிக்காததை நாம் தேர்வு செய்ய வேண்டும். அகிம்சையை பின்பற்றுவது, வார்த்தையில் மட்டுமின்றி, செயலிலும் உணவிலும்தான்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
22-மார்-202001:09:59 IST Report Abuse
Ananthakrishnan எந்த வைரஸ் பரவினாலும், அந்த நபர் அஹிம்ஸா வாதியா, காய்கறி உணவ உடகொள்கிறவரா, தர்மத்தின்படி நடப்பவரா அல்லது கர்மவினை அவரை சூழுந்துள்ளதா என்பதையெல்லாம் பரிசீலனை செய்து பற்றுவதில்லை. இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர்,, குழந்தை- முதியவர் என்ற எந்த பாரபட்சமும் இந்த வைரஸ் பார்க்காது. எனவே தத்துவங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு, முதலில் உயிரைக் காப்பாறிக் கொள்ள. அரசின் வழிகாட்டுதல் படி நடக்கப் பாருங்கள்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மார்-202014:59:20 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ABSOULETLY CORRECT. THIS WORD GOLDEN WORD. BUT THIS STATE SOME WORST LEADERS CREATING PEOPLES AGAINST HINDU DARMA.SO NO DEVELOPMENT EXPECTING THIS STATE
Rate this:
Cancel
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
21-மார்-202000:53:11 IST Report Abuse
Ananthakrishnan சைவம் சாப்பிட்டால் இந்த கர்மா (கொரோனா) பாதிக்காது என்கிறீர்களா? இதற்கும் அகிம்சைக்கும் என்ன சம்பந்தம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X