பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோவில் பயணிக்க கை கழுவணும்: டிரைவர் நூதன விழிப்புணர்வு பிரசாரம்

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஆட்டோ,  கைகழுவணும், டிரைவர்,விழிப்புணர்வு பிரசாரம்

பொள்ளாச்சி:''அரசு மட்டுமல்ல; நாமும் விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த முடியும்,'' என ஆட்டோ டிரைவர் ராஜாமணி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் ராஜாமணி,54. இவர், கடைவீதி பூமார்க்கெட் பகுதியில் கடந்த, 29 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறார்.இவர், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், கை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வலியுறுத்துகிறார்.பயணிகள் இறங்கியதும் ஆட்டோவை சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளார். இவரது செயல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

ஆட்டோ டிரைவர் ராஜாமணி கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆட்டோவில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன்.அதன் அடிப்படையில், டெட்டால், ஹேண்ட் வாஷ், சோப்பு ஆயில் மற்றும் கை துடைக்க உதவும் பேப்பர் போன்றவை வாங்கி வைத்துள்ளேன். ஆட்டோவில் பயணிகள் ஏறுவதற்கு முன், இருக்கை மற்றும் உள்பகுதியை சுத்தம் செய்து விடுவேன். பயணிகள் ஏறுவதற்கு முன், இறங்குவதற்கு முன், கைகளை கழுவ வலியுறுத்துகிறேன். கை கழுவியவர்கள் மட்டுமே ஆட்டோவில் பயணிக்கின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற நடைமுறை பின்பற்றுகிறேன். இதற்கு, பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அரசு மட்டுமல்ல, நாமும் விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த முடியும். இதற்கான முயற்சியாக இதை மேற்கொண்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
20-மார்-202016:48:30 IST Report Abuse
அசோக்ராஜ் வேண்டாத வேலை. பலரும் தொட்ட தண்ணீர் பாட்டில் மூலமே வைரஸ் பரவும். ஓவர் எக்ஸைட்மென்ட் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
20-மார்-202015:08:22 IST Report Abuse
நக்கல் அருமை... இவருக்கு இருக்கும் உணர்வு நம் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் வரவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
20-மார்-202008:37:48 IST Report Abuse
Sankar Ramu வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X