பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பீதியால் தடைபட்ட தேயிலை ஏற்றுமதி : ரூ.4.25 கோடி தேயிலை தூள் தேக்கம்

Added : மார் 20, 2020
Share
Advertisement

குன்னுார்:'கொரோனா' உட்பட பல்வேறு காரணங்களால் தேயிலை துாள் தேக்கமடைந்து வருகிறது; ஏலத்தில், 4.25 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கமடைந்தது.நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை துாள், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த, 11வது ஏலத்தில், 40 சதவீதம் தேக்கமடைந்து, 4.25 கோடி ரூபாய் மதிப்பிலான, 5.29 லட்சம் கிலோ தேயிலை துாள் தேக்கமடைந்தது.கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் தேயிலை துாள் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறுகையில்,''ஜனவரியில் இருந்து நடந்த ஏலங்களில், 30 சதவீதத்தில் இருந்து, 41 சதவீதம் வரை தேயிலை துாள் விற்க வில்லை. வடமாநில, உற்பத்தி அதிகரித்ததால், உள்நாட்டு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் தென்னகத்தை நாடுவதில்லை. ஏற்கனவே, பாகிஸ்தான், ஈரான் பிரச்னைகளால் ஏற்றுமதி பாதித்துள்ளது. தற்போது கொரோனா காரணமாக, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது; தேவை குறைந்ததால் வர்த்தகர்களிடையே வாங்கும் ஆர்வம் குறைந்தது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X