பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் மாரியம்மன் திருவிழா நடத்த தடை

Added : மார் 20, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி இளித்துரை கிராமத்தில் நடப்பாண்டு மாரியம்மன் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இளித்துரை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா நடத்தப்படுகிறது. விழாவில், ஊர்வலம், ஆடல் பாடல், நாடகம் மற்றும் இன்னிசை கச்சேரி நடப்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.தற்போது, கொரோனா அச்சத்தால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஏதுவாக, பூங்கா உட்பட, சுற்றுலா மையங்கள், காட்டேஜ்கள் மற்றும் 'பார்'கள் மூடப்பட்டு, மாவட்ட எல்லைகளில், ஆய்வு தீவிரமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு, இளித்துரை கிராமத்தில், 22, 23ம் தேதிகளில் நடைபெற இருந்த மாரியம்மன் திருவிழா, மக்களின் ஒருமித்த ஆதரவுடன், தடை செய்யப்பட்டுள்ளது.ஊர் தலைவர் ராமலிங்கம் கூறுகையில்,''திருவிழாவில், குறைந்தபட்சம், 10 ஆயிரம் பேர் கூடுவர். மாவட்ட நிர்வாகம், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த, அதிதீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவிழாவில் மக்கள் கூடுவதால், வைரஸ் தாக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், நடப்பாண்டு விழா நடத்துவதை தவிர்த்து விட்டோம்.''வெளியூருக்கு திருமணமாகி சென்ற எங்கள், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் விழாவுக்கு அழைப்பதில்லை. கோவில் பூசாரி முன்னிலையில், ஐந்து பேர் மட்டும், கோவில் நடையை திறந்து, பூசை செய்துவிட்டு, நடையை சாத்திவிட்டு திரும்பிவிடுகிறோம். முடிக்காணிக்கை உட்பட, நேர்த்திக்கடன் செலுத்துவது கூட, அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X