பொது செய்தி

தமிழ்நாடு

துபாயில் இருந்து திரும்பிய 144 பேர் 'கொரோனா' சிறப்பு மையத்தில் அனுமதி

Added : மார் 20, 2020
Share
Advertisement

மதுரை துபாயில் இருந்து மதுரை வந்த, 144 பேர், தனிமை கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை, 15 நாட்கள் சுகாதாரத் துறையினர் கண்காணிக்க உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, நேற்று மாலை, 4:40 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை வந்தது. அதில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு குழந்தை, மூன்று பெண்கள் உட்பட, 144 பேர் வந்திறங்கினர்.

'கொரோனா' அச்சுறுத்தலால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும், 15 நாட்கள் தனிமை கண்காணிப்பு மையங்களில் தங்க வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, மதுரையில், சின்னஉடைப்பு, ஆஸ்டின்பட்டியில், 180 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்ட சிறப்பு மையங்களுக்கு, 144 பேரையும் அழைத்துச் செல்ல, நான்கு பஸ்கள் வரவழைக்கப்பட்டன. அவர்களில், 15 பேர் மையங்களுக்கு செல்ல மறுத்தனர்.
விமான நிலைய அதிகாரிகள், போலீசார், சுகாதாரத் துறையினர் சமரசத்துக்கு பின், மையத்திற்கு செல்ல ஒப்புதல் தெரிவித்தனர்.
சின்ன உடைப்பு மையத்திற்கு, 100 பேரும், ஆஸ்டின்பட்டி மையத்திற்கு, 44 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள், இரு வாரங்கள், சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் இருப்பர். இவர்களுக்கு உணவு வசதிகளை, அரசே செய்யும். தினமும், மூன்று முறை அவர்களை, டாக்டர்கள் பரிசோதனை செய்வர்.
கொரோனா பாதிப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
திருச்சியில் 28 பேர்
துபாய், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, மூன்று விமானங்கள் திருச்சி வந்தன.
அதில் வந்த பயணியரை, சிறப்பு மருத்துவக் குழுவினர், 'தெர்மல் ஸ்கேனர்' உதவியுடன் பரிசோதனை செய்தனர்.
இதில், 27 பேர், உடல் நலக் குறைவுடன் இருப்பது கண்டறியப்பட்டதால், கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு, இரவே அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கு ஏற்கனவே, ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் தங்கியுள்ளார். 28 பேரையும், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், பரிசோதனை செய்ய உள்ளனர்.
அவர்களுக்கு, ஏதேனும் நோய் தொற்று கண்டறியப்பட்டால், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X