பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலூர் நகராட்சியில், 2019--20ம் நிதி ஆண்டில் நிலுவையில் உள்ள வரியினங்களை வசூல் செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி கடை வாடகை செலுத்தாத, 14 கடைகளுக்கு சில தினங்களுக்கு முன், 'சீல்' வைக்கப்பட்டது. குடிநீர் கட்டணம் செலுத்தாத, 26 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.இந்நிலையில், 'கடந்த, 2012 முதல் தற்போது வரை, பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு மற்றும் அலுவலக சொத்துவரியான, 6 லட்சத்து 71 ஆயிரத்து 224 ரூபாய்; குடிநீர் கட்டணம், 32 ஆயிரத்து 400 ரூபாய்' என, மொத்தம் 7 லட்சத்து 3,624 ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.இதனால், பி.எஸ்.என்.எல்., குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி தலைமையில் குழாய் ஆய்வாளர் ரமேஷ், வருவாய் உதவியாளர்கள் ஸ்ரீஜித், சுந்தர் மற்றும் ஊழியர்கள், ஹெல்த்கேம் பகுதியில் பி.எஸ்.என்.எல்., குடியிருப்புக்கு செல்லும், குடிநீர் இணைப்பை நேற்று, மாலை துண்டித்தனர்.கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,''நிலுவை தொகையை செலுத்தாததால் பி.எஸ்.என்.எல்., குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்பட்டது. நிலுவை தொகை செலுத்தியவுடன், குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இதேபோன்று, சொத்துவரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X