பொது செய்தி

தமிழ்நாடு

காரமடை சாலையில் சென்டர் மீடியன் அமைப்பு: விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறை ஏற்பாடு

Added : மார் 20, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் -- காரமடை இடையே, இரு வழி சாலை இருந்தது. இதன் வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. அதிகமான வாகன போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை, 14.95 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்தது. காரமடை குட்டை அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் மீனாட்சி பஸ் ஸ்டாப் வரை, சாலையின் இருபக்கமும் விரிவாக்கம் செய்து, 15.61 மீட்டர் அகலத்துக்கு, நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இரு இடங்களில் இருந்த, கல்வெட்டுகளை அகற்றிவிட்டு, பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சாலைகள் அகலமாக இருப்பதால், அதன் மையத்தில், வெள்ளை கோடுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் வாகனங்களில் வருபவர்கள், முன்னாள் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை முந்திச் செல்லும்போது, வெள்ளை கோட்டை தாண்டி, எதிரே வரும் வாகனங்களில் மோதி, விபத்துக்கு உள்ளாகின்றனர். பல விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம், சாலையின் மையப்பகுதியில், சென்டர் மீடியன் அமைக்கும் பணியை துவக்கியுள்ளது.தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை, 5 கி.மீட்டர் துாரத்துக்கு, சென்டர் மீடியன் அமைக்கப்பட உள்ளது. இரண்டு அடி அகலத்தில், ஒன்றரை அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படும். இதற்காக சாலையின் மையத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம், குழிதோண்டும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X