பொது செய்தி

தமிழ்நாடு

கோடை காலத்தில் கைகொடுக்கும் முள்ளங்கி!

Added : மார் 20, 2020
Share
Advertisement
உடுமலை:கோடை கால நீர் பற்றாக்குறையை சமாளிக்க, சிறு, குறு விவசாயிகள், முள்ளங்கி சாகுபடியை தேர்வு செய்து, நடவு செய்கின்றனர்.உடுமலை அருகே உரல்பட்டி, ஜக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனுார் உட்பட பகுதிகளில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்குள்ள, சிறு, குறு விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைத்து, சுழற்சி முறையில், காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.கோடை காலத்தில், கிணறு

உடுமலை:கோடை கால நீர் பற்றாக்குறையை சமாளிக்க, சிறு, குறு விவசாயிகள், முள்ளங்கி சாகுபடியை தேர்வு செய்து, நடவு செய்கின்றனர்.உடுமலை அருகே உரல்பட்டி, ஜக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனுார் உட்பட பகுதிகளில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்குள்ள, சிறு, குறு விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைத்து, சுழற்சி முறையில், காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.கோடை காலத்தில், கிணறு மற்றும் போர்வெல்களில், நீர் மட்டம் குறைந்து விடும்; அதற்கேற்ப, சாகுபடிக்கான திட்டமிடலை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அதில், குறைந்த நீர் தேவையுள்ள, முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். ஜக்கம்பாளையம் சுற்றுப்பகுதிகளில், பரவலாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: ஒரே நேரத்தில், தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் சாகுபடி, பல ஆயிரம் ஏக்கரில், செய்வதால், விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே, முள்ளங்கி, காலிபிளவர் போன்ற மாற்றுச்சாகுபடிகளுக்கு ஆர்வம் காட்டுகிறோம். முள்ளங்கி சாகுபடியில், வேர் அழுகல், சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளைத்துரு உட்பட நோய்கள், பருவநிலை மாற்றத்தால், ஏற்படுகிறது.பெரிய கிழங்கை, 40 முதல் 60 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு, 8 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. உடுமலை சந்தையில், விற்பனை செய்கிறோம். கிராக்கி அடிப்படையில், வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கு வந்து, கொள்முதல் செய்வதும் உண்டு.சாகுபடி வழிகாட்டுதல்களை தோட்டக்கலைத்துறையினர் வழங்கினால், அதிக விவசாயிகள் இச்சாகுபடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X