பொது செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளத்தில் 2,000 டன் கடந்தது நெல் கொள்முதல்

Added : மார் 20, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பகுதியில் அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில், 2,000 டன் அளவு நெல் கொள்முதல் நடந்துள்ளதுமடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில், 2,500 ஏக்கருக்கும் கூடுதலாக, நெல் சாகுபடி நடந்தது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் நடவு செய்யப்பட்டு, பயிர்கள் வளர்ந்து அறுவடை நிறைவடையும் நிலையில் உள்ளது.கடந்த ஆண்டு மூன்று இடங்களில் மட்டும், இந்த கொள்முதல் மையம் அமைக்கப் பட்ட நிலையில், கொள்முதல் செய்வதில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பயிர்களை, மைய வளாகத்தில் அடுக்கி வைத்ததோடு கொள்முதலுகாக பல நாட்கள் காத்திருக்கும் நிலைக்கும் ஆளாகினர். இதனால் விவசாயிகளுக்கு பலவித சிரமம் ஏற்பட்டது.இந்த பிரச்னைக்கு தீர்வாக கூடுதல் மையம் திறக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, அரசு நடப்பாண்டில், கணியூர் ஜோதி கோவில் அருகில், மடத்துக்குளம் ஒழுங்கு விற்பனை கூட வளாகத்தில், மற்றும் சினிமா தியேட்டர் அருகில், குமரலிங்கம் என, நான்கு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் திறந்தது.கடந்த பிப்.,8 ஆம் தேதியே, இந்த மையங்கள் திறக்கபட்டன. இதனைத்தொடர்ந்து 12, ஆம் தேதி நெல் கொள்முதல் தொடங்கியது. ஒரு மாதம் கடந்த நிலையில் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள 4 மையங்களில் 2,000 டன்களை கடந்து நெல்கொள்முதல் நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X