பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., இரண்டாம் சுற்று பாசனம் இன்று நிறைவு: திருமூர்த்தி அணையில் மீண்டும் நீர் சேகரிப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

உடுமலை:பி.ஏ.பி., முதலாம் மண்டலத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜன., 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இதில், 21 நாட்கள் தண்ணீர் திறப்பு, ஏழு நாட்கள் இடைவெளி என்ற அடிப்படையில், சுற்றுக்கு, 1,900 கன அடி வீதம், நான்கு சுற்றுக்களாக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் சுற்று, 21 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு, பிப்., 18ம் தேதி நிறைவு செய்யப்பட்டது.தொடர்ந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு, பிப்., 26ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 17 ல் நிறைவு செய்ய வேண்டிய நிலையில், இரண்டு நாள் கூடுதலாக வழங்கப்பட்டு, இன்று காலை, 6:00 மணிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.அணை நீர்மட்டம் உயரணும்:திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறைந்துள்ளது. வழக்கமாக காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 800 முதல் 900 கன அடி வரை நீர் கொண்டு வரப்படும்.ஆனால், தினமும், வினாடிக்கு, சராசரியாக, 550 முதல் 650 கன அடி வரை மட்டுமே நீர் வரத்து காணப்படுகிறது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல், பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதால், போதிய வேகம் மற்றும் அழுத்தம் இல்லாமல், கடும் வெயில் காரணமாக ஆவியாதல் அதிகரித்து, பாசன நிலங்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. திருமூர்த்தி அணை நீர் மட்டமும் வேகமாக சரிந்து, நாட்கள் செல்ல, செல்ல மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.எனவே, திருமூர்த்தி அணையில், 55 அடிக்கு மேல் நீர் சேமித்து, அதற்கு பின் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். பாசன பகுதிகளில் வறட்சி நிலவுவதால், தண்ணீர் திறப்பு இடைவெளியும் அதிகரிக்காமல், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு இன்றுடன் நிறுத்தப்படுகிறது. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக கூடுதல் நீர் எடுக்கப்படுகிறது,' என்றனர்.அணை நீர் மட்டம் :திருமூர்த்தி அணை நீர் மட்டம், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், அணை நீர் மட்டம், 22.11 அடியாகவும், நீர் இருப்பு, 621.41 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு,803 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து, 532 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X