பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு சந்தையில் 'கொரோனா!' மக்கள் புகாரால் மூடப்பட்டது

Added : மார் 20, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:'கொரோனா' பரவும் அபாயத்தை தவிர்க்க, தனியார் மாட்டு சந்தையை மூட வேண்டும் என சப் - கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அடுத்துள்ள திப்பம்பட்டியில், அரசு அங்கீகாரம் பெறாமல், தனியார் இடத்தில் மாட்டு சந்தை செயல்படுகிறது. ஒவ்வொரு வாரமும் கூடும் சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து வர்த்தகம் செய்கின்றனர்.குறிப்பாக, 'கொரோனா' பாதிப்பு அதிகமுள்ள கேரள மாநிலத்தில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் மாடு வாங்க சந்தைக்கு வருகின்றனர்.இதன் மூலம், பொள்ளாச்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிக அதிகம் உள்ளது. எனவே, பொது நலன் கருதி, திப்பம்பட்டி மாட்டு சந்தையை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவின் எதிரொலியாக, சப் - கலெக்டர் உத்தரவின் பேரில், கோமங்கலம் போலீசார் திப்பம்பட்டி மாட்டு சந்தையை நேற்று காலை தற்காலிகமாக மூடினர். சந்தை திரும்ப திறக்கப்படும் மறுதேதி அறிவிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X