'ஆட்சியை தக்க வைக்க கொரோனாவை பயன்படுத்துகிறார் பெஞ்சமின் நெதன்யாகு'

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

ஜெரூசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலில், 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 'தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு, கொரோனாவை ஒரு காரணமாக பயன்படுத்துகிறார்' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.



latest tamil news



இஸ்ரேலில், கடந்த ஓர் ஆண்டில், மூன்று முறை தேர்தல் நடந்துள்ளது. கடைசியாக நடந்த தேர்தலிலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை.இந்நிலையில், 120 எம்.பி.,க்களில், 61 பேர், முன்னாள் ராணுவத் தளபதியான, புளு அண்டு வொயிட் கட்சித் தலைவர் பென்னி கான்டஸ், பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, அவரை ஆட்சி அமைக்கும்படி, அந்நாட்டு அதிபர், ரேவான் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலில், 400 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 100 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை என, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.மேலும், பார்லி.,யும் முடக்கி வைக்கப்பட்டுஉள்ளது.


latest tamil news



இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளதாவது:தன் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணையை முடக்கவும், ஆட்சியை தக்க வைக்கவும், நெதன்யாகு முயற்சித்து வருகிறார். அதற்காகவே, கொரோனாவை காரணம் காட்டி பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.நாட்டு மக்களின், மொபைல் போன்களை கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியில் இருந்து தன்னை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க, பார்லி.,யையும் அவர் முடக்கி வைத்துள்ளார். ஜனநாயகத்தின் மாண்பை அவர் குலைத்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா உண்மையான தீவிரவாதம்
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
20-மார்-202014:06:07 IST Report Abuse
vijay ஆப்பு உன் குறுக்கு புத்திக்கு நாங்கள் நல்லாவே மோசம் என்று கருத்து பதிவு போடுகிறோம்
Rate this:
Cancel
20-மார்-202011:29:51 IST Report Abuse
ஆப்பு தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கொரோனா ஒரு அருட்கொடை (வரப்ரசாதம்). இவிங்களோட நிர்வாகத் திறமையின்மையை ஊத்தி மூட ஒரு அரிய வாய்ப்பு. மேலும் சிலர் நிரந்தர ஆட்சியாளர்களாகவும் நல்ல வாய்ப்பு.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-மார்-202014:18:25 IST Report Abuse
Dr. Suriyaதெரியும்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X