பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: எங்கு? எவ்வளவு?

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronavirus,CoronavirusOutbreakindia,corona,India,கொரோனா,இந்தியா,வைரஸ்

புதுடில்லி: இந்தியாவில், நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 173 ஆக உயர்ந்தது. அதில், 25 பேர் வெளிநாட்டவர். இத்தாலியைச் சேர்ந்த, 17; பிலிப்பைன்சைச் சேர்ந்த, மூன்று; பிரிட்டனைச் சேர்ந்த, இரண்டு; கனடா, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த, தலா ஒருவர், இதில் அடங்குவர். இதுவரை, டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில், தலா ஒருவர், உயிரிழந்துள்ளனர்.


மாநில வாரியாக வைரஸ் பாதிப்பு:மஹாராஷ்டிரா - 47 (மூன்று வெளிநாட்டவர் உட்பட)

கேரளா - 27 (இரண்டு வெளிநாட்டவர் உட்பட)

உத்தர பிரதேசம் - 19 ( ஒரு வெளிநாட்டவர் உட்பட)

ஹரியானா - 17 (14 வெளிநாட்டவர் உட்பட)

கர்நாடகா - 15

டில்லி - 12 (ஒரு வெளிநாட்டவர் உட்பட)

லடாக் - 8

ராஜஸ்தான் - 7 (இரண்டு வெளிநாட்டவர் உட்பட)

தெலுங்கானா - 6 (2 வெளிநாட்டவர் உட்பட)

ஜம்மு - காஷ்மீர் - 4

தமிழகம் - 3

ஆந்திரா, ஒடிசா, உத்தரகண்ட், மேற்கு வங்கம், புதுச்சேரி, சண்டிகர், சத்தீஷ்கர் பஞ்சாப், தலா ஒருவர்.


latest tamil news

எல்லை மூடல்:நம் அண்டை நாடான, பாகிஸ்தானில், வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 341 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களில், வைரஸ் பாதிப்பு, அங்கு கடுமையாக உயர்ந்துள்ளது.


latest tamil news
இந்நிலையில், இந் தியா - பாகிஸ்தான் எல்லையான, வாஹா எல்லையை, அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடுவதாக, பாக்., அரசு அறிவித்துள்ளது. 'இரு நாடுகளின் நன்மையைக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, பாக்., வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-மார்-202018:30:54 IST Report Abuse
Endrum Indian The coronavirus cases in India rose to 195 on Friday after 22 fresh cases were reported from various parts of the country, according to the Union Health Ministry data.In West Bengal 7 ADMITTED TO ISOLATION WARD Beliaghata ID hospital
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
20-மார்-202010:36:50 IST Report Abuse
Rpalnivelu இத்தாலி என்றாலே "எல்லா"ருக்கும் பயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X