பொது செய்தி

இந்தியா

'ஆயுர்வேத மருத்துவத்தில் சர்வதேச நாடுகள் ஆர்வம்'

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
ayurvedic_medicine,ayurvedic,parliament,ஆயுர்வேதம்,மருத்துவம்,சர்வதேசநாடுகள்,ஆர்வம்

புதுடில்லி: ''ஆயுர்வேத மருத்துவ முறையை பின்பற்றுவதில், சர்வதேச நாடுகள் ஆர்வமாக உள்ளன; இது, ஆயுர்வேத மருத்துவத்தின் பிறப்பிடமான நமக்கு பெருமை அளிக்கும் விஷயம்,'' என, ஆயுர்வேதத் துறை அமைச்சர் ஸ்ரீபத் யெசோ நாயக் கூறினார்.

குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆய்வு மைய அந்தஸ்து அளிக்கும் மசோதா மீதான விவாதம், லோக்சபாவில் நேற்று நடந்தது.

இதில், மத்திய ஆயுர்வேதத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யெசோ நாயக் பேசியதாவது: ஆயுர்வேத மருத்துவத்தின் பிறப்பிடம், நம் நாடு தான். தற்போது சர்வ தேச நாடுகள் அனைத்தும், ஆயுர்வேத மருத்துவ முறையை பின்பற்றுவதில் ஆர்வமாக உள்ளன; இது, நமக்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயம். ஆயுர்வேத மருத்துவம் தொடர்பாக, 14 நாடுகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும், ஆயுர்வேத மருத்துவத்தை பிரபலப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், 58 நாடுகளில் தகவல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news



காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பேசியதாவது: நம் நாட்டின் கிராமப்புறங்களில் வசிப்போரில், 65 சதவீதம் பேர், இன்னும் ஆயுர்வேத மருத்துவ முறையைத் தான் சார்ந்துள்ளனர். ஆனால், இந்த துறையின் பாதுகாப்புக்கு அரசு எதுவுமே செய்யவில்லை. இத்துறையில் உள்ளவர்களுக்கு, சட்டப்பூர்வமான பாதுகாப்பு இல்லை. ஆயுர்வேத மருத்துவம், கேரளாவில் தான் அதிகம் பின்பற்றப்படுகிறது. எனவே, கேரளாவில் இதற்காக பல்கலை அமைத்திருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க., உறுப்பினர் கலாநிதி வீரசாமி பேசுகையில்,''ஆயுர்வேத மருத்துவம், மிகவும் பழமையானது. இந்த மருத்துவ சிகிச்சையை கண்காணிக்க, ஒரு கவுன்சில் அமைக்க வேண்டும். இந்த மருத்துவ முறையை ஊக்குவிக்க, போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-202017:20:42 IST Report Abuse
நக்கல் எங்களது பெருமைகளை இந்தியர்கள் சொன்னால் கேட்டுக்கொள்ள மாட்டோம்... வெள்ளைக்காரன் அதை எடுத்து காப்புரிமை வாங்கி சொல்லும்போது அது எதுவாக இருந்தாலும் குடிப்போம்.... ஏனென்றால் எங்களை போன்ற சிலர் அடிமை வாழ்வையே விரும்புவர்கள்... எங்கள் பெருமையும் உங்களுக்கே சொந்தம்... இப்படிக்கு இந்திய அடிமைகள் சங்கம்....
Rate this:
Cancel
kuruvi - chennai,இந்தியா
20-மார்-202016:57:45 IST Report Abuse
kuruvi தமிழ்நாடு மஞ்சள் ஆந்திர சிகப்பு கார மிளகாய் இரண்டும் கிருமிநாசினி என்று ஒரு நம்பிக்கை உண்டு .அறுவது வருடங்களுக்கு முன்பு எல்லாம் சிறு கிராமங்களில் மருத்துவ வசதி கிடையாது.அங்கு இருந்த வண்ணார் தான் ஊர் வைத்தியர் .யாருக்காவது அடிபட்டு நாள்பட்ட சீழ் கோர்த்திருந்தால் ஒரு கார பவுடர் வைத்து கட்டுபோட்டுவிட்டால் சிலதினங்கள்ளில் புண்காணாமல் போய்விடும். இது என்துடைய சொந்த அனுபவம்கூட.அதனால் கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் நமது மஞ்சளையும் சிகப்பு மிளகாயையும் வைத்து கூட ஆராய்ச்சி செய்து பார்க்கலாம் .வெற்றிகூட வாய்ப்புண்டு.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
20-மார்-202013:08:16 IST Report Abuse
Ramalingam Shanmugam நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்படாத மருத்துவமே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X