பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ஓட்டல்களில் 'ஆடுதொடா' ரசம்

Added : மார் 20, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை ஓட்டல்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று (மார்ச் 20) முதல் 'ஆடுதொடா' மூலிகை ரசம் வழங்கப்படவுள்ளது.

ஓட்டல்கள் சங்க தலைவர் குமார் கூறியதாவது: மதுரையில் சிறிய, பெரியதாக 500 ஓட்டல்கள் உள்ளன. வழக்கமாக வழங்கும் ரசத்திற்கு பதில் கொரோனா வைரஸ் எதிர்ப்பாக 'ஆடுதொடா' ரசம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரசத்தில் 'ஆடுதொடா' தவிர சுக்கு, இஞ்சி, திப்பிலி, பூண்டு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் கலப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஓட்டல் ஊழியர்கள் அடிக்கடி கை கழுவவும், ஓட்டல்களை சுற்றி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X