தமிழ்நாடு

மதுரையில் கொரோனா பரிசோதனை மையம்; கலெக்டர் வினய் தகவல்

Added : மார் 20, 2020
Share
Advertisement

மதுரை : ''எம்.ஆர்.பி., விலையை விட கூடுதல் விலைக்கு சானிடைசர், முகக்கவசம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, கலெக்டர் வினய் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து ஆட்டோ டிரைவர்கள் சங்கம், பஸ் உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், மாநகராட்சி துணை கமிஷனர் நாகஜோதி, சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம், ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை, பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் பங்கேற்றனர்.

பின் கலெக்டர் கூறியதாவது: ஒரு முறை டிரிப் சென்று வந்த பிறகு ஆட்டோக்கள், பஸ்களை டிரைவர்கள், உதவியாளர்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். கிருமி நாசினி இல்லாத பட்சத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து துணியால் வாகனங்களை துடைக்க வேண்டும். பயணிகளுடன் அதிகம் பயணிப்பவர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும் வாகனங்களை சுத்தப்படுத்த வேண்டும். டிரைவர்கள் முகக்கவசம் அணிவதுடன், கைகளை ஒரு நிமிடம் வரை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுமக்கள் முடிந்தளவு அதிகம் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். தொழில் நிறுவனத்தினரும் ஷிப்ட் முடியும் போது இயந்திரங்களை சுத்தப்படுத்தலாம். இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டது.

விமான நிலையம் அருகே வெளிநாட்டிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தும் மையம் தான் அமைகிறது. அவர்கள் நோயாளிகள் அல்ல. நோய் அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து பின் அனுப்பப்படுவர். இதுகுறித்து மக்களிடம் தவறான கருத்து பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என கண்டறிய சென்னை, தேனி பரிசோதனை மையங்களுக்கு ரத்தம், தொண்டை சளி அனுப்புகிறோம். மதுரையிலும் இம்மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X