பொது செய்தி

தமிழ்நாடு

திருமண விழாவில் கொரோனா விழிப்புணர்வு: மாஸ்க் அணிந்து கொண்ட மணமக்கள்

Added : மார் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 திருமண விழாவில் கொரோனா விழிப்புணர்வு:  மாஸ்க் அணிந்து கொண்ட மணமக்கள்


சிவகாசி : சிவகாசி இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் கொரோனாவை தடுக்கும் விதமாக புதுமையான விழிப்புணர்வு திருமணம் இரு ஏழை மணமக்களுக்கு நடந்தது.சிவகாசி இன்னர்வீல் சங்கம் ஆண்டுதோறும் ஏழை மணமக்களை தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

இந்தாண்டு அய்யன்சல்வார்பட்டி காளிச்சாமி நாரணாபுரம் விஜயலட்சுமி, சிவகாசி அஜீத்குமார், சிவகாசி பேச்சியம்மாளுக்கு திருமணம் நடந்தது. இன்னர்வீல் சங்கம் திட்ட இயக்குநர்கள் விஜயலட்சுமி, பரணிமதன், ஞானமணி திருமணத்தை நடத்தினர். புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசைகளோடு கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். தம்பதிகளுக்கு மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று நோயினை தடுக்கும் பொருட்டு மாஸ்க் வழங்கப்பட்டது. மணமக்களும் மாஸ்க் அணிந்து கொண்டனர்.

இன்னர் வீல் சங்க திட்ட இயக்குநர் பரணிமதன் கூறியதாவது: திருமணம் நடத்த தேதி ஏற்கனவே திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக கூட்டம் சேர கூடாது என அரசு அறிவுறுத்தியதால் திருமணத்தை கொரோனா விழிப்புணர்வு கூட்டமாக மாற்றப்பட்டது. அதன்படி கொரோனா பரவும் விதம், தடுக்கும் விதம் பற்றி மணமக்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விளக்கப்பட்டது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-202008:43:53 IST Report Abuse
chandran கால்கட்டு பதில் வாய்கட்டு நல்ல முயற்சி. மணமக்கள் இனி வாயை கட்டி பழகினால் பிரச்சினை இல்லாமல் வாழலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X