பொது செய்தி

தமிழ்நாடு

நினைத்ததை நடத்தி காட்டும் சிவகணேசன்: தந்தையுடன் மகன் ஒரே சிலையில் அற்புதம்

Added : மார் 20, 2020
Share
Advertisement
சிவகணேசன், தந்தை, மகன்,சிலை, அற்புதம்

விருதுநகர் : மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது போல ஆன்மிகத்தில சிவனும், விநாயகரும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர். வினை தீர்ப்பான் விநாயகன் என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.

விநாயகருக்கு கணேசர், விக்னேஸ்வரர், ஆணைமுகத்தான், பிள்ளையார் என பல்வேறு பெயர்களும் வழங்கப்படுகின்றன. எந்த கோயில் சென்றாலும் முழு முதற்கடவுளாய் நாம் வணங்குவது விநாயகரை தான். விருதுநகரில் நான்கு வழிச்சாலையொட்டி வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில் தந்தையும், மகனும் அமர்ந்த கோலமாய் சிவகணேசன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. ராணி மங்கம்மாள் காலத்தில் சிவகணேசன் கோயில் கல் கட்டடமாக கட்டப்பட்டது. 19ம் நுாற்றாண்டில் மங்கம்மாள் சாலை தான் தற்போதைய நான்கு வழிச்சாலை.

நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக கோயில் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலையொட்டி தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டது. இக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவிலே சிவனும், கணேசனும் ஒரே கற்சிலையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த கோயிலில் தான். மேலும் கோயில் இடமாற்றப்பட்ட பின் சிவனுக்கு உகந்த வில்வ மரம் சுயமாக வளர்ந்துள்ளது. மேலும் வேப்பமரமும், அரசமரமும் இணைந்து சிவன், பார்வதி போன்று காட்சி தருவது இக்கோயிலில் கூடுதல் விஷேசம். இதில் வேப்பமரத்தில் நல்ல பாம்பு படம் எடுப்பது போன்ற அம்சம் காணப்படுகிறது. இங்கு சிவனுக்கு உகந்த பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ வழிபாடுகள் நடக்கிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடுகளும் நடக்கின்றன.
தினசரி காலை 8:30 மணிக்கு சிவகணேசன் கோயிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் மணிகட்டுவது முக்கிய வேண்டுதலாகும். நான்குவழிச்சாலை வழியாக வரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இக்கோயிலில் நேர்த்திக்கடன் வேண்டி அது நடந்த பின் மணி கட்டி செல்கின்றனர். இதனாலே தந்தையும், மகனும் ஒருசேர இணைந்து தங்களை வேண்டி செல்லும் பக்தர்களுக்கு நினைத்ததை நடத்தி காட்டுகின்றனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள். இன்றும் குழந்தை பாக்கியம், மனநலம், மகிழ்ச்சி வேண்டி பலர் சிவகணேசன் கோயிலை தேடி வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

கோயில் பூஜாரி ராஜேந்திரன் கூறுகையில், "நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தில் கோயில் அகற்றப்பட்டது முதல் இன்று வரை நான் கோயிலை பராமரித்து வருகிறேன். மக்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருவதால் சிவகணேசனுக்கு என்றும் தனி பக்தர்கள் கூட்டம் இருக்கிறது," என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X