இந்த பிரபஞ்ச இயக்கத்தை கட்டுப்படுத்துவதாக கருதப்படும் கறுப்பு ஆற்றலின் தன்மைகளை ஆராய உருவாக்கப்பட்டது தான், 'டார்க் எனர்ஜி சர்வே!'சிலி நாட்டில் சக்தி வாய்ந்த தொலைநோக்கியுடன், 2013 முதல் இயங்கும் இந்த ஆய்வு மையம், கறுப்பு ஆற்றலைப் பற்றி மட்டுமின்றி, பல தொலைதுார விண்வெளி ரகசியங்களை பதிவு செய்துள்ளது.
இந்த மையம் சேகரித்துள்ள தகவல்களை ஆராயும் பல நாட்டு விஞ்ஞானிகளின் உதவியுடன், தற்போது புளூட்டோ கிரகத்திற்கு அப்பால் உள்ள விண்வெளியில் வலம் வரும், 140 கிரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், சில கி.மீ., அகலம் உள்ளவை முதல், குள்ள கிரகம் என்று சொல்லப்படும் கோள்கள் வரை பலவும் அடங்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE