மனித எலும்புக்கு மாற்றாக, உறுதியான ஒரு பொருளை, ஸ்வீடனின் சாமர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்க முயன்றனர். ஆனால், அவர்கள் உருவாக்கிய பொருள், அதற்கு நேர்மாறாக, மென்மையாக, வளைந்து கொடுக்கும் தன்மையுடனும் இழுவைத் தன்மையுடனும் வலுவாகவும் இருந்தது.
கூடவே, இந்த பொருளுக்கு, 'பயோ கம்பாட்டிபிலிட்டி' எனப்படும் மனித உடலுக்கு ஒத்துப்போகும் தன்மையும் இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். மருத்துவ உலகில் இதை எப்படி பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்தபோது, மனித திசுக்களுக்கு இடையே இவற்றை வைக்க முடியும் என்று தெரிய வந்தது.
இந்த பொருளால் செய்யப்படும் செயற்கை உறுப்பின் மீது, 'பெப்டைடு' எனப்படும் புரதங்களை பூசி விட்டால், நோய் கிருமிகள் தொற்றாமல் இருக்கும் என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.ஏற்கனவே மருத்துவர்கள் பயன்படுத்தும், 'பிளெக்சி கிளாஸ்' என்ற பொருளின் தன்மையை கொண்டுள்ள இந்த பொருள், 'எலாஸ்டோமெர்' என்ற வகையைச் சேர்ந்தது. முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் இதை செலுத்தி, வேண்டிய வடிவில் இதை வார்த்தெடுக்கவும் முடியும்.
அடுத்து, முதுகெலும்பு தொடர்களுக்கு இடையே உள்ள சவ்வு, சிறுநீர் குழாய், உடலில் வேண்டிய பாகத்திற்கு மட்டும் மருந்தை செலுத்தும் திசுத் தொகுப்பு என்று பல வகைகளில் இதை பயன்படுத்த முடியும்.இதை உருவாக்கிய விஞ்ஞானிகளுள் ஒருவரான, ஆனந்த் குமார் ராஜசேகரன், 'ஏ.சி.எஸ்., நேனோ' என்ற ஆய்விதழில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE