பொது செய்தி

தமிழ்நாடு

2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசம்: இயற்கை முறை சாகுபடிக்கு விழிப்புணர்வு

Added : மார் 20, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: விவசாயிகளுக்கு, 2 கிலோ பாரம்பரிய நெல் விதையை இலவசமாக கொடுத்து, இயற்கை முறையில் சாகுபடி செய்ய, தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, வேளாண் சார்ந்த ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கான கல்வி கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் கூறியதாவது: தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை, விவசாயிகள் பயிரிட்டனர். மக்கள் தொகை பெருக்கத்தால், குறுகிய காலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க, ரசாயன மருந்து, உரங்கள் பயன்படுத்தி, புது ரகங்கள் பயிரிட்டனர். அதனால், இயற்கை முறையில், குறுகிய, நடுத்தர, நீண்ட காலம் பயிரிடப்பட்ட, பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடுவதை தவிர்த்தனர். அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களும், 'உணவே மருந்து' எனும் அடிப்படையில், மருத்துவ குணம் நிறைந்தவை. புழுதிகார், மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, நவரா, கருப்பு கவுணி, 60ம் குறுவை, காளாநமக், கருடன் சம்பா, காட்டுயாணம், குடவாழை உள்ளிட்ட ஏராளமான நெல் ரகங்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. சர்க்கரை நோயை தடுக்கும். தாது சத்து, இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்தி நிறைந்தது. இலுப்பை பூ சம்பா, ஆத்தூர் கிச்சிலி, ஆற்காடு கிச்சிலி, சேலம் சன்னா போன்ற ரகங்கள் நல்ல மணமுடையவை. எங்களிடம், 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் உள்ளன. இடையில் கைவிடப்பட்ட பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாப்பதே நோக்கம். விருப்பமுள்ள விவசாயிகளுக்கு, 2 கிலோ பாரம்பரிய நெல் விதையை இலவசமாக கொடுத்து, இயற்கை முறையில் சாகுபடி செய்ய, தொழில்நுட்ப பயிற்சியளிக்கிறோம். தமிழகத்தில், 15 மாவட்டங்களில், பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒப்பந்த சாகுபடி முறையில், ஒரு கிலோ நெல், 35 முதல், 50 ரூபாய்க்கு பெற்றுக்கொள்கிறோம். வேளாண் கண்காட்சியில், பாரம்பரிய நெல் அரங்கு அமைத்தும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நஞ்சில்லா இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதில், பாரம்பரிய விவசாயம் துணை நிற்கும். சந்தேகங்கங்களுக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டியிலுள்ள அலுவலகத்துக்கு நேரடியாகவோ, 96988 88363 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X