பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் ரயில்வே கோட்டத்தில் மின்னணு அலுவலக நடைமுறை அமல்

Added : மார் 20, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், காகித பயன்பாட்டை குறைக்க, மின்னணு அலுவலக நடைமுறை அமலுக்கு வந்தது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களில், இணையவழி அலுவலக நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 7,882 பணியாளர், மின்னணு நடைமுறையின் கீழ் வந்துள்ளனர். இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் கூறியதாவது: சேலம் கோட்டத்தில், 878 பயனாளர், மின்னணு அலுவலக நடைமுறையின் கீழ் வந்துள்ளனர். இதன்மூலம், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம், காகிதம் இல்லாத அலுவலக நடைமுறைக்கு மாறியுள்ளது. மேலும், நம்பகமான முறையில், அலுவலக கோப்புகளை கையாளுதல், வெளிப்படைத்தன்மை, துல்லியமாக கண்காணிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. கோப்புகளை நிலுவை இல்லாமல் விரைந்து, சேவை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X