பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும்'

Added : மார் 20, 2020
Share
Advertisement

சேலம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ, மாணவியர், வாகனம் ஓட்டினால், பெற்றோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகரில், சில மாதமாக நிகழ்ந்த கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில், இளஞ்சிறார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகள் தூண்டுதலால், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள், பெற்றோரால் முறையாக கண்காணிக்கப்படாத இளஞ்சிறார்கள், குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். அதில், பலருக்கு பெற்றோர் இல்லை என்பதும், சிலருக்கு, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக உள்ளதும் தெரியவருகிறது. ஓட்டுனர் உரிமமின்றி, சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த, போலீசுக்கு மக்கள், பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும். குழந்தைகளின் அன்றாட நிகழ்வை கவனித்து, அவர்கள் பாதை தவறாமல் நேர்வழியில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பெற்றோர் இல்லாத குழந்தைகளின் உறவினர்கள், தங்கள் குழந்தைகளை போன்று, அவர்களையும் கவனிக்க முன் வரவேண்டும். இந்த அறிவுரையை மீறி, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர், அவர்களை தூண்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கெரோனாவால் விடுமுறை விடப்பட்ட நிலையில், சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை பாயும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X