சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி

Added : மார் 20, 2020
Share
Advertisement

வாழப்பாடி: அரசு பஸ் மீது மோதியதில், தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியானார். சேலம், களரம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன், 57. இவரது மகன் மணிகண்டன், 28; சேலத்திலுள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று, வசூலில் ஈடுபட, ஹோண்டா சைன் பைக்கில், வாழப்பாடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மதியம், 3:00 மணிக்கு, வாழப்பாடி பாரத் ஸ்டேட் வங்கி எதிரே வந்தபோது, கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர், வேகத்தை குறைத்தார். அப்போது, மணிகண்டனின் பைக், பஸ்சின் பின்புற சக்கரம் மீது உரச, நிலைதடுமாறி விழுந்தார். அதில், சம்பவ இடத்திலேயே, மணிகண்டன் உயிரிழந்தார். சரவணன் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X