சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரிடம் ரூ.1 கோடி மோசடி: நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மேலாளர் கைது

Added : மார் 20, 2020
Share
Advertisement

சேலம்: வாலிபரிடம், ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், அழகாபுரம், காட்டூரைச் சேர்ந்த, அப்துல் குடோஸ் அஸ்பர், 35, கடந்த மாதம், சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்திலிடம் அளித்த மனு: சேலம், சங்கர் நகரில், 'மகாலட்சுமி ஜூவல்லர்ஸ்' பெயரில் நகை கடை நடத்தும் ரவிக்குமார், 43, அவரது மனைவி காந்தலட்சுமி, 40, மேலாளர்கள் குரு தர்மன், பலராம மணிகண்டன், கோவை மணிகண்டன் ஆகியோர், நகை தொழிலில் முதலீடு செய்தால், பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறினர். அதை நம்பி, நண்பர்கள், உறவினர்களிடம் கடனாக பெற்று, ஒரு கோடி ரூபாய் வழங்கினேன். பணத்தை பெற்ற ரவிக்குமார் உள்ளிட்டோர், தங்கள் மடிக்கணினியில், 'அஸ்பர் கேப்பிடல் பிராபிட் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்' எடுத்து, நான் செலுத்திய பணத்துக்கு, பல மடங்கு பங்கு தொகை அதிகரித்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், உறவினர்கள் வழங்கிய பணத்தை கேட்டதால், ரவிக்குமார் உள்ளிட்டோரிடம் கேட்டேன். அவர்கள் பணத்தை தர மறுத்து, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால், உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சரவணன் தலைமையில் தனிப்படையினர் விசாரித்து, மோசடி வழக்குப்பதிந்தனர். நேற்று, காந்தலட்சுமி, குருதர்மனை கைது செய்த தனிப்படையினர், ரவிக்குமார், பலராமமணிகண்டன், மணிகண்டன் ஆகியோரை, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X