சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசார் துரத்தியபோது தடுமாறி விழுந்ததில் வழிப்பறி கொள்ளையர் 2 பேருக்கு கால்முறிவு

Added : மார் 20, 2020
Share
Advertisement

சேலம்: போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்கள், தடுமாறி விழுந்ததில் கால்முறிவு ஏற்பட்டு காயமடைந்தனர். அவர்களை, போலீசார் பிடித்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, நாட்டாமங்கலம் செல்ல, சின்னகொண்டலாம்பட்டி பெருமாள் கோவில் பிரிவு அருகே வந்தார். அப்போது, எதிரே பைக்கில் வந்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, 'பிரேஸ்லெட்'டை பறித்துக்கொண்டு மாயமானார். மணிகண்டன் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்ததில், ஆட்டையாம்பட்டி, சென்னகிரியைச் சேர்ந்த பாலசுப்ரமணி மகன் ரப்பர்வாயன், 24, என்பதும், சேலம் கோவில்களில் உண்டியலை உடைத்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. அத்துடன், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர் மீது, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அவர், நேற்று காலை, 2:00 மணிக்கு, பட்டர்பிளை பாலம் அருகே பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு, போலீசார் சென்ற போது, ரப்பர்வாயன், தன் பைக்கை சாலையில் போட்டு விட்டு, பால கைப்பிடி சுவரை பிடித்து குதித்தார். அப்போது, காலில் முறிவு ஏற்பட்டதால், அவரை பிடித்த போலீசார், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தகவல்படி, கூட்டாளியான, லைன்மேடு, வேலுதெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் சம்பு, 32, என்பவரை, சீலநாயக்கன்பட்டி அருகே, போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பி ஓடிய சம்பு, ஊத்துக்காடு, கல்குவாரியில் ஏறியபோது தடுமாறி விழுந்ததில், காலில் முறிவு ஏற்பட்டது. அவரையும் பிடித்து, அரசு மருத்துவமனையில், போலீசார் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X