பொது செய்தி

இந்தியா

மூத்த குடிமக்கள் சலுகை ரத்து: பயணிகளை தவிர்க்க ரயில்வே நடவடிக்கை

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Measure, IndianRailway, Coronavirus, கொரோனா, ரயில்வே,

புதுடில்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய முதியவர்கள் ரயில் பயணத்தை தவிர்க்கவும் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ரயில் டிக்கெட்களில் மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் தவிர்த்து மற்றவர்களுக்கு, வழங்கப்பட்டு வந்த டிக்கெட் கட்டண சலுகை ரத்து செய்துள்ளது. இது, மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் எனவும், முன்பதிவு மற்றும் முன்பதிவு அல்லாத பெட்டிகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து ரயில்வே எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அத்தியாவசியமற்ற பயணத்தை நிறுத்தும் வகையில், 155 ரயில்களை வரும் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில், பயணிகளுக்கான மாற்று ரயில் வசதியை பொருத்தும், ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

2. பொது மக்கள் அத்தியாவசியமற்ற ரயில் பயணத்தை தவிர்க்கவும், உடல்நல குறைவுள்ள முதியவர்கள் ரயில் பயணத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ரயில் டிக்கெட்களில் மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து மற்றவர்களுக்கு, வழங்கப்பட்டு வந்த டிக்கெட் கட்டண சலுகை ரத்து செய்துள்ளது.


latest tamil news


3.கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், ரயில் நிலையங்களில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில் நிலையத்தை ஆய்வு செய்யும்படியும், பிளாட்பார கட்டணத்தை ரூ.50 ஆக அதிகரிக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4.அத்யாவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளவர்கள் ரயில் பயணத்தை தவிர்க்கும்படியும், ஒரு வேளை ரயில் பயணத்தில் காய்ச்சல் ஏற்பட்டால், உதவிக்கும், சிகிச்சைக்கும் ரயில்வே ஊழியர்களை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், தூய்மை குறித்தும், செய்ய வேண்டியது மற்றும் செய்யக் கூடாதவை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

6. மும்பையில் ஏ.சி. பெட்டியுடன் இயக்கப்படும் உள்ளூர் ரயிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை, இந்த சேவை நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்துள்ள ரயில்வே, மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
21-மார்-202003:28:09 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி நொண்டீ குர்ருத வலிகீபோஷிதமா
Rate this:
Share this comment
Cancel
Arunachalam Saptharishi - Chennai,இந்தியா
20-மார்-202021:41:03 IST Report Abuse
Arunachalam Saptharishi நான் 4 மாதம் கழித்து சபரிமலைக்கு போக டிக்கெட் எடுக்க வேண்டும் . நான் ஒரு சீனியர் சிட்டிஸன். நாளை டிக்கெட் எடுக்கவும் இதே நிலைமை தானா
Rate this:
Share this comment
Cancel
20-மார்-202018:07:52 IST Report Abuse
ஆப்பு தனியா ஐ.ஏ.எஸ் ஆப்பீசர்கள் வெச்சிருக்காய்ங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X