சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்., தலைவர் கணவருக்கு கொலை மிரட்டல்: தம்பதி கைது

Added : மார் 20, 2020
Share
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியை சேர்ந்தவர் அன்பரசு, 43, இவரது, மனைவி ரீனா, 39, மெணசி பஞ்., தலைவராக உள்ளார். மெணசியில் உள்ள பீய் குட்டை ஏரி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அதே பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன், 35, என்பவர் மீது கடந்த, 16ல், பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ரீனா புகாரளித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு அன்பரசு, அவரது நண்பர் தீர்த்தகிரியுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த சுந்தரபாண்டியன், அவர் மனைவி மணிமேகலை, 32, ஆகியோர் அன்பரசுவை ஆபாசமாக திட்டியதுடன், போலீசில் எதற்கு வழக்கு கொடுத்தாய் எனக் கேட்டு, செங்கல்லால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து, சுந்தரபாண்டியன், அவர் மனைவி மணிமேகலை ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X