கிடப்பில் சாலைப்பணி: மாணவர்கள் கடும் அவதி

Added : மார் 20, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, சொக்கன்கொட்டாய் வழியாக, செட்டிக்கரை பொறியியல் கல்லூரி செல்லும் சாலை கிடப்பில் போடப்பட்டதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தர்மபுரி அடுத்த, செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், செட்டிக்கரை மெயின் சாலையில் இருந்து, சொக்கன்கொட்டாய் வழியாக இருந்த மண் சாலை, தார்ச்சாலையாக மாற்ற, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. பின், அதன்மேல் மண்கொட்டி பரப்பி விடப்பட்டது. ஆனால், இச்சாலை தற்போது வரை தார் ஊற்றப்படாமல், மண் சாலையாகவே உள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில், இச்சாலை வழியாக சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் மாணவர்கள், அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, செட்டிக்கரை அரசினர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் நலன்கருதி, இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X