பொது செய்தி

தமிழ்நாடு

வெங்கடரமண சுவாமி கோவிலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

Added : மார் 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: வெங்கடரமண சுவாமி கோவிலில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, கணவாய்ப்பட்டி வெங்கடரமண சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கை கழுவுதல், கிருமி நாசினி தெளித்து தனிநபர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் கைகளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே வரவேண்டும் என்று எடுத்துச் சொல்லி கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போன்ற செய்முறைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களிலும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், வருவதை தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை தர்மபுரி உதவி ஆணையர் பிரகாஷ், ஆய்வாளர்கள் சாமிதுரை, ரகுவரராஜ்குமர், நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X