சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினிலாரி மோதி தேங்காய் வியாபாரி சாவு

Added : மார் 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த எம்.பள்ளத்தூரை சேர்ந்தவர் அண்ணாமலை, 85. தேங்காய் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மொபட்டில் சிவம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற மினி லாரி மொபட் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை, மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மத்தூர் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய திருப்பத்தூர் மாவட்டம், பரதேசிப்பட்டியை சேர்ந்த மினி லாரி டிரைவர் சிலம்பரசன், 31, என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X