சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்குவாரி குட்டையில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் பலி

Added : மார் 20, 2020
Share
Advertisement

போச்சம்பள்ளி: கல்குவாரி குட்டையில் மூழ்கி, பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த கெட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் சஞ்சைகுமார், 18, மத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 16ல் பள்ளிக்கு சென்ற மாணவன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மத்தூரை அடுத்த நாகம்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியில் உள்ள குட்டையில், ஒருவரின் உடல் மிதப்பதை கண்டு அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த போலீசார், உடை மற்றும் புத்தகப்பையிலிருந்த அடையாள அட்டையை வைத்து இறந்துள்ளது, காணாமல் போன சஞ்சைகுமார் என கண்டுபிடித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த, 16ல் சக மாணவர்கள் நான்கு பேருடன் கல்குவாரியில் குளிக்க வந்தபோது, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி சஞ்சைகுமார் இறந்தது தெரியவந்தது. கடந்தாண்டு இதே கல்குவாரி குட்டையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நீரில் மூழ்கி இறந்த நிலையில், இந்தாண்டு கோடை விடுமுறைக்கு முன்பே, ஒரு மாணவன் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X