பொது செய்தி

இந்தியா

பிரதமரின் சுய ஊரடங்கு - வரவேற்ற பாலிவுட் பிரபலங்கள்

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
PMModi, bollywood, celebrities,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ள சுய ஊரடங்கு உத்தரவை பாலிவுட் சினிமா பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் 'டிவி' மற்றும் வானொலி வழியாக உரையாற்றினார். ‛‛கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடுகிறது. இது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியா, மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது. இதை விரட்ட வரும் 22ம் தேதி நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' நடத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ''அன்று காலை 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்'' என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதை பாலிவுட் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.


அஜய் தேவ்கன் கூறுகையில், சக இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 22ம் தேதி அனைவரையும் வீட்டிலேயே இருக்கும்படி பிரதமர் கேட்டு கொண்டுள்ளார். இதை அனைவரும் உறுதியோடும், கட்டுப்பாடோடும் செய்ய வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.




latest tamil news



ஷில்பா ஷெட்டி கூறுகையில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ஏற்று நாம் அனைவரும் சுய கட்டுப்பாட்டை ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும். ஜெய்ஹிந்தி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


ரித்தேஷ் தேஷ்முக் டுவிட்டரில், மார்ச் 22ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7மணி வரை மக்களே சுய ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். 60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலேயே இருக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராட நாட்டுக்காக இதை அனைவரும் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.



ஹேமமாலினி டுவிட்டரில், பிரதமர் மோடியின் உரை நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தது. நாட்டின் மீதான அவரின் தன்னலமற்ற பக்தி மற்றும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அவர் மேற்கொள்ளும் திட்டங்களை பார்த்து வணங்குகிறேன். நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றுபட்டு இந்த கொடிய நோயின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவோம் ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.



மகேஷ் பட் டுவிட்டரில், சமூக தொலைவு, ஒதுங்கி இருப்போம். சுய ஊரடங்கு செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.




latest tamil news



ஷபானா ஆஷ்மி டுவிட்டரில், கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சு அருமையாக இருந்தது. மார்ச் 22 அன்று காலை 9 மணி முதல் இரவு 7மணி வரை சுய ஊரடங்கு செய்து கொள்வோம் என பிரதமர் கூறியிருப்பதை நாம் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதேப்போன்று இந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு சேவை செய்யும் நபர்களை கவுரவிக்கும் விதமாக கைதட்ட கேட்டு கொண்டதையும் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.




latest tamil news



ரோகித் ஷெட்டி டுவிட்டரில், மோடிக்கு நிகர் வேறு யாரும் இல்லை. நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் சொன்னதை பின்பற்றுவோம். சுய ஊரடங்கு செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.




அக்ஷய் குமார் டுவிட்டரில், பிரதமர் மோடியின் சிறந்த முயற்சி. மார்ச் 22ம் தேதி நாம் அனைவரும் சுய ஊரடங்கு செய்து, இந்த உலகத்துக்கு நாம் அனைவரும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என எடுத்துரைப்போம் என கூறியுள்ளார்.



வருண் தவான் டுவிட்டரில், மார்ச் 22ம் தேதி, சுய ஊரடங்கிலும், அன்று மாலை 5மணிக்கு நாட்டுக்காக சேவை செய்யும் ஹீரோக்களை கைதட்டி வரவேற்கும் விஷயத்திலும் நான் பங்கேற்பேன். சமூகத்தில் இருந்து விலகி இருப்போம். பிரதமர் மோடியின் அறிவுரைகளை பின் பற்றுவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
21-மார்-202007:31:18 IST Report Abuse
a natanasabapathy ஆட்டு மண்டை நடிகன் எல்லாம் எதுவும் கூறவில்லையே ஏன் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டங்களா
Rate this:
Share this comment
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
21-மார்-202003:39:27 IST Report Abuse
Sheri இனி சங்கு தான்.
Rate this:
Share this comment
Cancel
20-மார்-202020:32:37 IST Report Abuse
பார்ப்பனன் ஓஓஓஓஓ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X