நெட்பிளிக்ஸ் மீடியா நிறுவனம் ஒளிபரப்பு தரத்தை குறைத்தது ஏன்?

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

லாஸ் கடோஸ்: கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளில், மக்கள் வீட்டிலேயே தனிமைப்பட்டுள்ளதால், இன்டெர்நெட் பயன்பாடு அதிகரித்து, நெட்பிளிக்ஸ் மீடியாவின் ஒளிபரப்பு வேகம் குறைந்தது. எனவே வேகத்தை அதிகரிக்க நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பு தரத்தினை தற்காலிகமாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.



latest tamil news


கொரோனா வைரஸ் தொற்று, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியதால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அந்நாடுகளில் பொதுமக்கள் வெளியேறாமல் வீட்டிலேயே தங்கியுள்ளனர். கல்விக்கூடங்கள், ஷாப்பிங் மால்கள், எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வீட்டிலேயே மக்கள் முடங்கியிருப்பதால் இன்டர்நெட்டில் மூழ்கியிருக்கின்றனர். அதிகமானோர் நெட்பிளிக்ஸ் மீடியாவை பயன்படுத்துகின்றனர். நெட்பிளிக்ஸ் சேவையில் ஆடியோ வீடியோ சேவையின் வேகம் குறைகிறது. எனவே ஒளிபரப்பு தரத்தை 30 நாட்களுக்கு மட்டும் குறைப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் இன்டர்நெட் ட்ராபிக் 25 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


இன்டர்நெட் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஐரோப்பிய ஆணையர் தெர்ரி பிரெடன், ஐரோப்பிய மக்கள் ஒரே நேரத்தில் இன்டர்நெட் பயன்படுத்துவதால், அதற்கான சர்வர் கட்டமைப்பு வசதி இல்லை. எனவே இன்டெர்நெட் மீடியாக்களான நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ், ஹூலு, எச்.பி.ஓ, அமேசான் உள்ளிட்டவை எச்.டி., தரத்தில் மீடியா சேவையை தவிர்த்து தற்காலிகமாக 'ஸ்டான்டர்டு ஸ்ட்ரீமிங்' தரத்தில் வழங்குமாறு தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.கடந்த மார்ச்18 ம் தேதி இன்டெர்நெட் ட்ராபிக் காரணமாக ஒரு மணி நேரம் இன்டர்நெட் தடைபட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X