பிரதமர் அழைப்பு: தலைவர்கள் ஆதரவு

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
janatacurfew, p.chidambaram, chidambaram, congress, cong, PmModi,  மக்கள்ஊரடங்கு, பிரதமர்மோடி, சிதம்பரம்,ப.சிதம்பரம்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கொரோனா தொற்றை விரட்ட, மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொற்று நோயாகிய, 'கொரோனா' வைரசை விரட்ட, வரும், 22ம் தேதி, நாடு முழுவதும், 'மக்கள் ஊரடங்கு' நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ''அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,'' என, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.


latest tamil news




இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
பிரதமர் நேற்று வெளியிட்ட அறிவிப்பிற்கு எங்களது ஆதரவை நான் தெரிவிக்கிறேன். ஆனால், கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுடன் திரும்பி வருவதைத் தவிர பிரதமருக்கு வேறுவழியில்லை என உறுதியாக நம்புகிறேன்.


latest tamil news


இந்தியாவிலும் உலகத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்த பிறகு, நகரங்களை தற்காலிகமாக 2- 4 வாரங்கள் மூடப்படுவது அவசியமாகிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன். பிரதமர் அவர் தைரியமாக செயல்பட வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிராக தார்மீக ஆயுதங்களை வைத்து போராட முடியாது என தெரிவித்துள்ளார்.



காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் கூறுகையில்,'' கொரோனா வைரசுக்கு எதிராக போராட்டத்தில் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரசும், அதன் தொண்டர்களு்ம ஆதரவு அளிப்பார்கள். தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வை பரப்புவதற்கு நாங்கள் உதவி செய்வோம். அதைப்போல் தேவைப்பட்டால், எந்தவித அவசர பணிகளையும் ஒருங்கிணைப்போம் என தெரிவித்துள்ளார்.


கமல் ஆதரவு


மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் கூறுகையில், மார்ச் 22 காலை 7 மணி முதல் 9 மணிவரை பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எனது ரசிகர்கள், நண்பர்கள், மக்களை கேட்டு கொள்கிறேன். மக்கள் ஊரடங்கு என்ற பிரதமரின் அழைப்பிற்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன். தற்போதைய மிகப்பெரிய அசாதாரண சூழ்நிலையில், நாம், அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒற்றுமையாக, வீட்டிற்குள் இருக்கும் போது, பாதுகாப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.


latest tamil news



மேலும், இந்த டுவிட்டரில், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம்,தனுஷ், சிம்பு, விஜயசேதுபதி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத், ஜிவிபிரகாஷ், ஜிப்ரான் ஆகியோரையும் கமல் மேற்கோள்காட்டியுள்ளார்.



மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மார்-202016:32:51 IST Report Abuse
இந்தியன் kumar நல்லதே செய்யும் நல்லதே நினைக்கும் மோடிஜி நல்ல மக்களின் மனதில் என்றும் நிலைத்து இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
21-மார்-202007:23:42 IST Report Abuse
spr "கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுடன் திரும்பி வருவதைத் தவிர பிரதமருக்கு வேறுவழியில்லை என உறுதியாக நம்புகிறேன்."இதைத்தான் இவர் முன்பு செய்தார் அதனையே பாஜக அரசு இப்பொழுது செய்கிறது புத்திசாலித்தனமாக அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத்தவறியது இப்பொழுதுதான் இவருக்குப் புரிகிறது போலும் எதிர்க்கட்சி என்ற ஒரே காரணத்திற்காக அரசு செய்த அனைத்துச் செயல்களையும் கடுமையாக விமரிசித்தவர் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவிப்பது சரியா ஆயுர்வேதம், சித்த மருத்துவம் என்ற பல மருத்துவ முறைகள் இருந்தும் கொரோனா தாக்கம் குறித்து மருந்துகள் எதுவும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை இதுவரை மூச்சுத்திணறல் நோய் வந்த பொது கொடுக்கப்பட்ட மருந்துகள் என்னவாயின மக்களிடம் பீதியைக் கிளப்பும் வகையில் (சீனாவைப் போல அதனைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை) கை கழுவுவது தனித்திருப்பது கடைகளை மூடுவது போன்ற சில செயல்களை எத்தனை நாட்கள் செய்ய இயலும் நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் இதனையெல்லாம் எவரும் கேள்வி கேட்கவில்லை , ஒருவேளை இதனைக் கரணம் காட்டி அரசு இன்னமும் "கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுடன் திரும்பி வருவதைத் தவிர பிரதமருக்கு வேறுவழியில்லை" என்பதனை சுட்டிக் காட்டுகிறாரோ புதிய வரி விதிப்புக்கள் பணக் கட்டுப்பாடு நடவடிக்கை எல்லாம் தொடருமோ
Rate this:
Share this comment
Cancel
20-மார்-202023:36:31 IST Report Abuse
கருணாகரன் என்னது தலைவர்களா, நல்லா சொன்னிங்க போங்க. ஒண்ணு பணத்தாச புடிச்ச ஊழல்தலை, இன்னொண்ணு தருதலை.
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
24-மார்-202009:12:33 IST Report Abuse
karutthuஐ லைக் இட்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X