பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்: விவசாயிகள் பங்கேற்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, கலிங்கப்பட்டியில், நபார்டு சாலிடாரிட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு, பங்குதாரர்கள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கரூர், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் பரமேஷ்குமார் பேசியதாவது: நபார்டு வங்கி உதவியுடன், சிநேகிதி நிறுவனம் மூலம் சாலிடாரிட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. பங்கு தொகையாக, 1,000 ரூபாய் செலுத்தி உறுப்பினர் ஆகலாம். விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெறுதல், சந்தைபடுத்துதல் உத்திகள் ஆகியவை குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது. சுற்றுப்புற சுகாதாரம், கை சுகாதாரம், சுவாச சுகாதாரம், விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம், 'கொரோனா'விலிருந்து, நம்மை காத்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார். இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X