பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு: கண்காணிப்பாளர்களுக்கு பணி ஒதுக்கீடு

Added : மார் 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., அரசு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கு, பணி ஒதுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும், 27ல் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், தனித்தேர்வர்கள் உள்பட, 21 ஆயிரத்து, 303 பேர் எழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும், 92 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் வரவழைக்கப்பட்டு, 10 கட்டுக்காப்பு மையங்களில், 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில், 92 முதன்மை கண்காணிப்பாளர்கள், 92 துறை அலுவலர்கள், 300 பறக்கும் படையினர், 1,200 அறை கண்காணிப்பாளர்கள், 20 வழித்தட அலுவலர்கள் உள்பட, 1,704 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X