பொது செய்தி

தமிழ்நாடு

சுய ஊரடங்கு: சங்கங்கள் அழைப்பு

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
janatacurfew, மக்கள்ஊரடங்கு, பிரதமர்மோடி,கோயம்பேடு, சங்கங்கள்

இந்த செய்தியை கேட்க

சென்னை; வரும் 22ம் தேதி சுய ஊரடங்கில் ஈடுபடுமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று அன்றைய தினம், கோயம்பேடு மார்க்கெட், தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் கடைகள் செயல்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் தெரிவித்துள்ளன.


கோயம்பேடு மார்க்கெட் மூடல்


பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாளை மறுநாள்( மார்ச் 22) கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


latest tamil news




தனியார் பால் விநியோகம் ரத்து


பால்முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்புமார்ச் 22ம் காலை 7 மணி முதல் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டாலும், காலை 7 மணிக்கு முன்பாக அனைத்து பகுதிகளுக்கும் பால் விநியோகம் செய்யப்பட முடியாது. தமிழகத்தில் நாளை மறுநாள்( மார்ச்22) மட்டும் தனியார் பால் விநியோகம் செய்யப்பட மாட்டாது. மேலும், நாளை கூடுதல் நேரம் பால் விநியோகம் நடைபெறும். தேவையான அளவு பாலை நாளையே வாங்கி வைத்து கொள்ளுங்கள்


ஓட்டல்கள் மூடப்படும்


22ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் என ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.


கடைகள் அடைப்பு


பிரதமர் மோடியின் அறிவுரை ஏற்று வரும் ஞாயிறு அன்று அஐனத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.பிரதமரின் வேண்டுகோளை ஏற்று 22 அன்று சுய ஊரடங்கில் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை முதல் கடலுக்கு செல்ல மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மார்-202010:55:48 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அனாதைகளின் வயிற்றுக்கு நாளை யார் சாப்பாடு பொறுப்பு ஏற்பதை உறுதி செய்யணும் அப்பாவி கூட்டத்தை யாராகிலும் வயிறு நிரப்ப வேண்டும்
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
21-மார்-202011:23:51 IST Report Abuse
sankarஅடேயப்பா ரொம்ப கவலை படுகிறார் இவர் - எல்லாருக்கும் சேர்த்துதான் இந்த ஊர்க்கு தம்பி - உன் புத்தி எப்படி எல்லாம் வேலை செய்யுது - கொஞ்சமாவது திருந்த முயற்சி செய் -...
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
20-மார்-202019:46:43 IST Report Abuse
அசோக்ராஜ் இந்து வியாபாரிகள் சங்கம் தொடங்குன பிறகு மிஷநரி ஆதரவு விக்கிர ராசாவுக்கு பயம் கண்டு போச்சு. இல்லாட்டி இவனாவது மோடியுடன் ஒத்துப் போவதாவது?
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
20-மார்-202018:36:06 IST Report Abuse
Thirumal Kumaresan அனைவருக்கும் நன்றி,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X