கிளை வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

Added : மார் 20, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: மேட்டூர்கிழக்குகரை வாய்க்காலின், கிளை வாய்க்காலை சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. மேட்டூர்கிழக்குகரை வாய்க்காலின் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், சின்னா கவுண்டம்பாளையம், ஆலாம்பாளையம், எலந்தகுட்டை, களியனூர், மோளகவுண்டம்பாளையம், மாம்பாளையத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாசனத்திற்கு உயிர் நாடியாக இது உள்ளது. மேட்டூர் கிழக்கு கரை பிரதான வாய்க்காலில் வரும் தண்ணீர், கிளை வாய்க்கால் மூலம், விளைநிலங்களுக்கு கடைமடை வரை செல்கிறது. தற்போது பிரதான வாய்க்கால், மதகு ஆகியவற்றை சீரமைக்கும் பணி நடக்கிறது. கிளை வாய்க்கால் பல இடங்களில், பராமரிப்பின்றி உள்ளது. இதில் கரை இல்லாமலும், சேதமடைந்தும், மேலும் குப்பை, பிளாஸ்டிக் கழிவு அதிகளவு தேங்கியுள்ளது. சில இடங்களில் கழிவுநீரும் தேங்கியுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் போது, அவசர கதியில், சுத்தம் செய்வதால் எந்த பயனும் ஏற்படுவதில்லை, வாய்க்காலில் உள்ள கழிவுகளை, தண்ணீர் மூலமாக விளைநிலங்களுக்கு அடித்து வரும்போது, மண் வளம், சாகுபடி பாதிக்கிறது. அதனால், பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது, முழுமையாக விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை; சாலைகளில் வீணாகிறது. இதனால், விளைநிலங்களுக்கு தண்ணீர் முழுமையாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கிளை வாய்காலின் கரையை பலப்படுத்தி, பராமரிப்பு செய்து, கழிவு குப்பையை அள்ளி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X