பொது செய்தி

இந்தியா

சுய ஊரடங்கு: விழிப்புணர்வு ஏற்படுத்துவார்களா தமிழ் நடிகர்கள்?

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (70)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை பின்பற்றுமாறு தங்கள் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்க தமிழ் சினிமா பிரபலங்கள் முன் வர வேண்டும்.

இந்தியாவில் பரவ தொடங்கி உள்ள கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 22ம் தேதி 'மக்கள் சுய ஊரடங்கு' செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்களும் இதை செய்ய வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். தமிழ் நடிகர்கள் இதுவரை மக்களுக்காக ஒன்றும் செய்தது கிடையாது. கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு படம் ரிலீஸாகும் சமயத்தில் மட்டும் பரபரப்பாக எதையாவது பேசிவிட்டு அதையே படத்திற்கு விளம்பர யுக்தியாக பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு அவர்களை எங்கும் பார்க்க முடியாது.


latest tamil newsஇன்று உலகளவில் மக்கள் எதிர்கொண்டிருப்பது கொரோனா எனும் கொடிய வைரசை. சாதி, மதம், ஏழை, பணக்காரன் என யாரையும் இந்த கொடிய வைரஸ் விட்டு வைப்பதில்லை. இதைத் தடுக்க என்ன தான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். மார்ச் 22ம் தேதி 'மக்கள் சுய ஊரடங்கு' செய்ய வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதை தமிழ் சினிமா நட்சத்திரங்கள், தங்கள் ரசிகர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இன்று நடிகர்கள் மிகப்பெரும் ஸ்டார்களாக இருக்கலாம். இவர்கள் ஸ்டாராக காரணமாக இருந்தது மக்கள் தான். அப்படிப்பட்ட மக்களின் நலனை காக்க, நடிகர்களும் வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
22-மார்-202014:54:55 IST Report Abuse
g.s,rajan All cine stars can generously help the people with their earned money. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
21-மார்-202014:08:50 IST Report Abuse
s vinayak தயவு செய்து சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடிக, நடிகையர்களிடம் கருத்து கேட்டு வெளியிடுவதை தவிர்த்தால் நாடு நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
jayaraman - attayampatti,இந்தியா
21-மார்-202013:36:19 IST Report Abuse
jayaraman எல்லோரும் மோடி PHOBIA உள்ளவர்கள் ஆச்சே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X