பொது செய்தி

இந்தியா

வெறிச்சோடிய திருப்பதி...

Updated : மார் 21, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement

திருப்பதி : திருமலைக்கு பக்தர்கள் செல்வது தடுக்கப்பட்டதால், ஏழுமலையான் கோவில் வெறிச்சோடியது.latest tamil newsதிருப்பதி திருமலைக்கு வந்த பக்தர் ஒருவருக்கு, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி தென்பட்டதால், திருமலைக்கு செல்ல பக்தர்களுக்கு, தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. திருமலையில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவரும், நேற்று மதியம், 12:00 மணிக்குள், தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு, கோவில் மூடப்பட்டது. அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும், கோவிலுக்குள் உள்ள, படிகாவலி அருகே, முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.


latest tamil news'ஏழுமலையானுக்கு தினமும் நடக்கும் கைங்கரியங்கள், ஆகம விதிப்படி எவ்வித குறைவும் இல்லாமல் நடக்கும்' என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டத்தால் எப்போதும் சூழ்ந்திருக்கும் திருமலை, நேற்று முதல் வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது. திருமலைக்கு செல்லும் மலைப்பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட நடைபாதை மார்க்கங்களும் மூடப்பட்டுள்ளன. திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களிலும், பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
காளஹஸ்தி கோவிலும் மூடல்


ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலில், ஆண்டு முழுவதும், ராகு - -கேது பரிகார பூஜை, எவ்வித தடங்கலும் இல்லாமல் நடந்து வரும். கோவிலில் முக்கிய உற்சவங்கள் நடந்தாலும், மகா சிவராத்திரி நாளிலும், கோவில் நிர்வாகம் பரிகார பூஜையை ரத்து செய்ததில்லை. ஆனால், கொரோனா வைரஸ் அச்சத்தால், காளஹஸ்தி கோவில் மூடப்பட்டதுடன், ராகு - கேது பரிகார பூஜையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குருக்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று, ஆறு கால பூஜைகளையும் விடாமல் செய்து வருகின்றனர். இதனால், மூடிய கோவிலை தான், பக்தர்கள் பார்த்து செல்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202011:56:59 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Muthal thamila, en poi peyar? Bakthargal varigirargal.but Government requested to close the dharshan. Dont just vomit without knowing.
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
21-மார்-202011:52:24 IST Report Abuse
sahayadhas கிரண் , கர்ம வினை ஜனங்களுக்கா? கடவுள்களுக்காக? வருமானம் குறைந்து விட்டது
Rate this:
Cancel
21-மார்-202010:10:45 IST Report Abuse
ஆப்பு இருந்தாலும், இறந்தாலும் கடவுளுக்கு நன்றி. இருந்தால், என்னை கொரோனா கொல்லாமல் வாழ வைத்ததற்கு. இறந்தால் உன்னிடம் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கு, பிறவி நோயிலிருந்து விடுதலை தந்ததற்கு. இது எப்பிடி இருக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X