சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரள கள்ளநோட்டு கும்பல் கைது

Added : மார் 20, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி: ஆனைமலை அருகேயுள்ள அய்யாமடைப்பிரிவு ஊரில், கள்ளநோட்டுகளை மாற்றமுயன்ற கேரள கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பொள்ளாச்சி மாவட்டம் ஆனைமலை அருகில் உள்ள அய்யாமடைப்பிரிவு எனும் ஊருக்கு கேரளாவில் இருந்து மூன்று பேர், இரண்டு கார்களில் வந்துள்ளனர். அவர்கள் அடையாளம் தெரியாத மற்றொரு கும்பலிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கை மாற்றியுள்ளனர். இதனை அறிந்த அங்கிருந்த ஊர்மக்கள், போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் உள்ளிட்ட போலீசார், கள்ள நோட்டு கும்பலை விரட்டிச் சென்று, வடக்கிப்பாளையம் பாலத்தில் வைத்து கைது செய்தனர். இரண்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்தவர்கள் விபரம் வருமாறு: கேரளா பாலக்காடைச் சேர்ந்த நசீர் (32), கொளஞ்சிப்பாறையை சேர்ந்த முகம்மது தன்சீர் (22), ஷெரீப் (19) கல்லூரி மாணவர். இந்த மூவரும் ஆறு லட்சம் ரூபாய் அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் செய்து எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X