கோவை: கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் தமிழக - கேரள எல்லைகளை மூட, கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
![]()
|
கொரோனா வைரஸ் தொற்று, கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இதுவரை 25 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால், 31,173 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில், 237 பேர் மருத்துவமனையில் கண்காணிக்கப்படுகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட மூவர், பஸ், சேர் ஆட்டோ மற்றும் ரயில்களில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றதால், கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது.
![]()
|
இதனால், கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. தமிழக - கேரள எல்லையில் உள்ள செக்போஸ்ட்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் பறவைக்காய்ச்சலும் பரவத் துவங்கியுள்ளது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால், தமிழக - கேரள எல்லைப்பகுதியை முழுமையாக மூட, கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
![]()
|
இன்று (20ம் தேதி) மாலை 6:00 மணி முதல், இந்த தடை உத்தரவு அமலாகிறது. இதேபோல், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களிலும், தமிழக - கேரள எல்லைகளை மூட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement