கொரானா' உலகம் வழிகாட்டுகிறது

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020
Share
Advertisement



latest tamil news


கொரானாவை அலட்சியப்படுத்திய உலக நாடுகள் இப்போது அதன் அபாயத்தை உணர்ந்து கொரானாவை வெல்வதற்காக முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
அந்த முயற்சிகளை இங்கும் அமுல்படுத்தலாம்.


latest tamil news


பொது இடங்களில் தற்காலிக குழாய்கள் அமைத்து சோப்பு போட்டு கைகழுவதற்கு மக்களே ஏற்பாடு செய்துள்ளனர், கேரளாவில் மட்டும் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்தனர் இது நாடு முழுவதும் கொண்டுவரப்பட வேண்டும் அதற்கு தொண்டு நிறுவனங்கள் ஆதரவு தரவேண்டும்.


latest tamil news


அதே போல முதியவர்களுக்கு சிறுவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை பொதுவான இடங்களில் வைத்து தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்லுங்கள் என்று போர்டும் போட்டுள்ளனர் கருணை கொண்ட உள்ளங்களின் இந்த செயல் பாராட்டைப் பெற்றுள்ளது இங்கே இந்த நேரத்தில் கள்ள சந்தையில் மாஸ்க் மற்றும் கைகழுவ பயன்படும் சானிட்டைசர் போன்ற மருத்துவ பொருட்களை விற்று மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் மாறவேண்டும்.


latest tamil news


மக்கள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் பழக வேண்டும் என்பதை வெளிநாட்டவர் சரியாக கடைபிடிக்கின்றனர் ஆனால் மக்களுக்கு பாடமாக இருக்கவேண்டிய ஆட்சியாளர்கள் பலரே இங்கு அவைகளை கடைபிடிக்காமல் உள்ளனர்.
கொரானா வைரஸ் உலகிற்கு பொதுவான எதிரியாகிவிட்டது அதை எதிர்க்க சமாளிக்க வெளிநாட்டவர் காட்டும்,கடைபிடிக்கும் வழிகளில் சரியானவற்றை நாமும் கடைபிடிக்கலாம் தப்பில்லை.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X