சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
  'டவுட்' தனபாலு

தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா: வரும், 2021 சட்டசபை தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழும். அந்த தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, தேர்தல் நேரத்தில், தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். அந்த முடிவு, தமிழக மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது படி பார்த்தால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், தற்போதுள்ள, அ.தி.மு.க., அணியில் இருக்க மாட்டீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமை உங்களை ஏமாற்றி விட்டதாக உணர்கிறீர்களோ என்ற டவுட் தான், இதற்கு காரணம்! தி.மு.க., - எம்.பி., - ஆர்.எஸ்.பாரதி: ஆர்.கே.செட்டியார் முதல், நிர்மலா சீதாராமன் வரை, தமிழகம், ஆறு, மத்திய நிதியமைச்சர்களை தந்துள்ளது. எனினும், தமிழகத்தை, மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது; அது ஏன் என தெரியவில்லை. ரயில்வே திட்டங்களுக்கு, வாரியம் அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

'டவுட்' தனபாலு: அப்பாடா, நீண்ட நாட்களுக்கு பின், பொது வெளியில் பேசியுள்ளீர்கள். தமிழக பத்திரிகைகள், நீதிபதிகள், குறிப்பிட்ட ஜாதியை பற்றி, சமீபத்தில் தரக்குறைவாக பேசியதால், கட்சித் தலைமையால் கடுமையாக கண்டிக்கப்பட்டு, உங்களுக்கு வாய்ப்பூட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததோ என்ற, 'டவுட்' மக்களுக்கு இருந்தது. பார்லியில் நீங்கள் இவ்வாறு பேசியுள்ளதன் மூலம், இப்போது, அந்த டவுட் உறுதியாகிஉள்ளது.


இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: கன்னியாகுமரியில், கடலில் உள்ள, விவேகானந்தர் சிலையையும், அதன் அருகில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில், கடலில் பாலம் அமைக்கப்படும்.

'டவுட்' தனபாலு: கன்னியாகுமரி கடலில், பாலம் அமைத்து, விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்க வேண்டும் என்பது, அந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வோரின் நீண்ட கால கோரிக்கை. இப்போது நீங்கள் அந்த கோரிக்கையை நிறைவேற்ற உள்ளதன் மூலம், விவேகானந்தர் பாறைக்கு செல்பவர்கள், திருவள்ளுவர் சிலை அருகிலும் சென்று அதன் பிரமாண்டத்தை பார்க்க முடியும். இதன் மூலம், இரண்டு நினைவு சின்னங்களும், மக்கள் மனதில் நிற்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
21-மார்-202023:06:08 IST Report Abuse
tamilvanan இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-மார்-202005:58:55 IST Report Abuse
D.Ambujavalli விடிந்தால் கல்யாணம், பிடி பாக்கு வெற்றிலை என்றானாம். இன்னும் எட்டு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் உள்ளபோதுதான், 110 அறிவிப்புகள் வருகிறதென்றால், இவர் தனக்கு மட்டும்தான் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார் என்பது தெளிவாகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X