சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நல்லதொரு அரசியல் வரட்டும்!

Added : மார் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

நல்லதொரு அரசியல் வரட்டும்!

கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கட்சி வேறு; ஆட்சி வேறு' என்ற புதிய அரசியல் மாற்றத்தை, ரஜினி முன்னெடுத்துள்ளார். அதை, அறிவார்ந்த அனைவரும் ஏற்றுக்கொள்வர்.கட்சி பதவியில் இருப்போர் தான், ஆட்சி அமைந்ததும், முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை, யாரும் மறுக்க முடியுமா?ரஜினியின் திட்டப்படி ஆட்சி அமைந்தால், அது நிச்சயம், மாபெரும் அரசியல் மாற்றம் தான், என்பதில் சந்தேகமில்லை.நம் மக்கள், ஒரு தலைவரை ஏற்று, அவரை பிரதமர் அல்லது முதல்வர் நாற்காலியில் அமர வைத்து, அழகு பார்ப்பது தான் வழக்கம். மாறாக, தன்னை விட, திறமையான நபரை, முதல்வராக்குவேன் என, ரஜினி கூறுவது சிறப்பானது அல்லவா!ஒரு கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்போது, ஓரளவு சிறப்பாகவே இருந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில், ஆட்சி அமைந்த போது தான், ஊழல்கள் வளர்ந்தன.தமிழகத்தை பொருத்தவரையில், திராவிடக் கட்சிகள் தான், மாறி மாறி, 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. திராவிட ஆட்சியின்போது தான், மக்கள் நலத்திட்டங்களுக்கு, 'கமிஷன்' என்ற ஊழல் உருவானது.தற்போது, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லை என்றாலும், அந்த கட்சிகளிடம், மலை போல, பணம் குவிந்து கிடக்கிறது; அதை செலவு செய்து, தேர்தலை எதிர்கொண்டு, வெற்றி பெற்று விடலாம் என, அவர்கள் நினைக்கின்றனர்.இந்நிலையில் ரஜினி, 'கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, வேறொரு தலைமை' என, அறிவித்துள்ளார். அது, இப்போது, பேசு பொருளாக, தமிழகம் முழுவதும் மாறியுள்ளது.'ரஜினியை, எப்படியும் கிண்டல் செய்ய வேண்டும்' என, முடிவெடுத்துள்ள சிலர், வழக்கம் போல், அவரின் அறிவிப்பை, கேலி செய்து, சமூக வலைதளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.ஆனால் நடுநிலையாளர்களும், மாற்றத்தை விரும்புபவர்களும், ரஜினியின் கொள்கைகளை வரவேற்கவே செய்கின்றனர்.ரஜினியை எதிர்த்தவர்கள் கூட, அவரின் திட்டத்தை வரவேற்றுள்ளனர். நல்லதொரு அரசியல் மாற்றத்தை, தமிழகத்தில் முன்னெடுப்போம்.
இனியாவதுசெய்வார்களா?

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எம்.பி.,க்கள் ஒவ்வொருவருக்கும், ஆண்டு ஒன்றுக்கு, தொகுதி மேம்பாட்டு நிதியாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.எம்.பி.,க்கள், தங்கள் தொகுதிக்கு தேவையான வசதிகளை, இந்த நிதியில் இருந்து ஒதுக்கீடு பெற்று, திட்டங்களை நிறைவேற்றலாம்.நடப்பு நிதி ஆண்டுக்கு, எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக, 53 ஆயிரத்து, 764 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுமைக்கும் ஒதுக்கப்பட்ட இந்நிதியில், 5,275 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை என்ற செய்தியை படித்த போது, அதிர்ச்சியாக இருந்தது.கடந்த, 2017ம் ஆண்டில், 5,029 கோடி ரூபாய்; 2019ல், 4,103 கோடி ரூபாய் நிதியை, எம்.பி.,க்கள் பயன்படுத்தாமல் இருந்துள்ளனர்.இன்றும், பல அரசுப் பள்ளிகள், போதிய அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு, தளவாடங்கள், உபகரணங்கள் இன்றி தள்ளாடி வருகின்றன. குடிநீர் வினியோகம் சீராக இல்லை. பல கிராமங்களில், சாலைகள் மோசமாக உள்ளன.
அவற்றை சரிசெய்யும் கடமை, எம்.பி.,க்களுக்கு உள்ளது. ஆனால், மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, அவர்கள் வீணாக்கிஉள்ளனர்.தங்கள் தேவையை நிறைவேற்றுவார் என நம்பி தானே, வாக்காளர்கள் ஓட்டு போடுகின்றனர். வெற்றி பெற்று, எம்.பி.,யானதும், மக்களை மறந்துவிடுவது நியாயமா?எம்.பி.,க்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம்; அரசு ஒதுக்கும் பணத்தை, மக்களுக்காக பயன்படுத்தலாமே... இனியாவது செய்வார்களா?

ஜாதிக் கட்சியைஆதரிக்காதீர்!

மு.பெரியண்ணன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), கவுண்டச்சிபாளையம், ஈரோடு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா; குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்றார், பாரதியார்.பொது வாழ்வில் இணைவோர், ஜாதி பெயரை சொல்லி பதவியைப் பிடித்தால், மற்ற சமூகத்தினருக்கு, காழ்ப்புணர்ச்சி ஏற்படும். இதனால், மக்களிடையே பிளவு ஏற்படும்.நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் சக்தியான ஜாதியை, தேர்தலில் முன்னிறுத்தக் கூடாது.ஜாதி சங்கங்கள், தேர்தலில் போட்டியிடக் கூடாது; அந்த சங்கங்களுடன், பெரிய கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது.எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தவரை, ஜாதிக்கட்சிகளின் ஆதிக்கத்தை தலைதுாக்கவிடவில்லை; அவர், அதை விரும்பவும் இல்லை.அதன் பின், ஜாதிக் கட்சிகளை வளர்த்து, மரமாக்கிய பெருமை, இரு திராவிடக் கட்சிகளையே சேரும்.தற்போது, மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிகளான, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், ஜாதிக் கட்சிகளை ஆதரிக்கக் கூடாது. தேர்தலில், அவற்றை புறக்கணிக்க வேண்டும்.

அரசு அதிகாரிகளைபழி வாங்கும்படலம் தொடர்கிறது!

கீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 70 தேக்கு மரங்கள், வெட்டி கடத்தப்பட்டதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டியதால், சம்பந்தப்பட்ட மரக்கடத்தல் கும்பல் ஒன்று சேர்ந்து, உயர் அதிகாரியை, மாற்றி இருக்கிறது.உண்மையாக உழைத்து, தன் கடமையை செய்ய நினைத்த அதிகாரிக்கு, இந்த அவலம் நடந்திருக்கிறது. இதில், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை என்னவென்று சொல்வது!கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர், ஆனந்த், அதிரடியாக, மதுரைக்கு மாற்றல் செய்யப்பட்டதன் பின்னணியில், 'பெரு முதலை'களின் தலையீடு இருப்பதாக தெரிகிறது.கடந்த, 2011ல், எஸ்.ஐ.,யாக பதவியேற்று, ஒன்பது ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்துள்ள, தென்காசி மாங்குடியைச் சேர்ந்த ராஜ்குமார், நேர்மையாக நடந்ததன் காரணமாக பல முறை பணியிட மாறுதலுக்கு உள்ளாகியுள்ளார்.நேர்மையைக் கடைப்பிடிக்கும் அலுவலருக்கு இதுதான் கதி என்றால், நாடே வெட்கித்தலை குனிய வேண்டாமா... ஜனவரிக்கான அவரின் சம்பளம் இன்று வரை வழங்கப்படவில்லை.தமிழகத்தில் அரசியல்வாதிகளுடன் உயரதிகாரிகள் கை கோர்த்து, வேண்டாத வேலைகளைச் செய்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மக்களின் வரிப் பணத்தில் வயிறு வளர்ப்போர், அந்த மக்களுக்கே துரோகம் இழைப்பதை, எப்படி பொறுத்துக் கொள்வது?நேர்மை, கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும், அரசுப் பணியாளர்கள், உயர் அதிகாரிகளால் பழி வாங்கப்படும்போது, அவர்களுக்கும் உயர் அதிகாரிகளான தலைமைச் செயலரும், முதல்வரும் ஏன் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க முன் வரக் கூடாது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
22-மார்-202008:57:21 IST Report Abuse
venkat Iyer திரு.உத்ரன் கூறியது ஒரு அதிசியம் தான். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் மடப்புரம் ஊராட்சியில் மண்மலை கிராமத்தில் எங்களால் கஷ்டப்பட்டு 28 ஆண்டுகள் தோட்டத்தில் வளர்த்த தேக்கு மரத்தை வீட்டு நிலைக்கு தயார் செய்ய மரவாடியில் அடி ரூ.87/- அறுக்க வேண்டியதை ரூ.118/- அதிகமாக போடப்பட்டதோடு வன அலுவலருக்கு என்று அதில் ரூ.1000/- பில்லில் எழுதியதுதான் அதிர்ச்சியாக இருந்தது. லஞ்சம் எப்படி வெளிப்படையாகவே எழுதி வாங்கப்படுகின்றனர் என்பதை ஆக்கூர் இரட்டைகுளம் பஸ் ஸ்டாப் அருகே இருக்கும் மரம் அறுவை மில் செயல்படுவது உண்மையில் அங்கு திருட்டு மரங்கள் அனுப்பலாம்,நேர்மையாக மரம் அறுக்க வருபவர்களிடமும் பணம் பெறுவதை முக்கியமான நோக்கமாக கருதுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் கவனிப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-மார்-202006:07:50 IST Report Abuse
D.Ambujavalli நேர்மை, நீதி என்று அடிமடியிலேயே கை வைத்துவிடுவார் என்றுதானே தூங்குகிறார்கள். பெரிய இடமும், அமைச்சர்களும்தானே இதில் அதிகம் aar am காட்டுகிறார்கள். பங்குக்கு பங்கம் வரும்படி செய்பவர்களுக்காக ஆதரிக்க அவர்கள் அவ்வளவு அசடர்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X