சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மார் 20, 2020
Share
Advertisement
  பேச்சு, பேட்டி, அறிக்கை

'நல்ல யோசனை தான்; மாநில அரசு செய்யலாம்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில், தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். அவர்கள் மீது, இதற்கு முன், துறை ரீதியாக எடுத்த நடவடிக்கைகளை, தமிழக அரசு ரத்து செய்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.


'நாட்டிலேயே, அதிகமானோருக்கு வேலை கொடுக்கும் துறையாக ரயில்வே துறை தான் உள்ளது. தனியார்மயம், இந்த காலத்தில் அவசியமான ஒன்று...' என, கூறத் தோன்றும் வகையில், எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்க பொதுச் செயலர் கண்ணையா பேட்டி: ரயில்வே துறையையும், மத்திய அரசு, தனியார்மயமாக்கியுள்ளது. அதனால், இந்த துறையில் இளைஞர்களுக்கு இனிமேல் வேலைவாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான். தனியார் ரயில்களில், கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.


'உங்களைப் போன்றவர்களே, இப்படி கூறினால், போராட்டங்களை இன்னும் அதிகரித்து விட மாட்டாரா... அது அவருக்கு, கெட்ட பெயரை ஏற்படுத்தி விடாதா...' என, மடக்கத் தோன்றும் வகையில், கவிஞர் வைரமுத்து பேச்சு: இப்போதுள்ள சூழலில், திராவிட இயக்கத்தின் மிச்சமுள்ள ஒரே நம்பிக்கையாக ஸ்டாலின் மட்டுமே உள்ளார். கருணாநிதி, அன்பழகன் போன்றோர் விட்டுச் சென்ற பணிகளை, ஸ்டாலின் தொடர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


'பா.ஜ., புதிய தலைவரான நீங்கள், தமிழகம் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பது, இதன் மூலம், தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கும்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியாவில் படித்து வரும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரும் உறுதிஅளித்துள்ளார்.


'கடையடைப்பு, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துதல் அனைவருக்கும் சிரமமானதே. வைரஸ் பரவலை தடுக்க, அவசியம் என்பதால், சிரமத்தை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்விக்கிரமராஜா பேட்டி: பெரிய மால்கள், திரையரங்குகளை மூடச் சொல்வது நியாயமானதே. அதே நேரத்தில், சிறிய கடைகள், அன்றாட பயன்பாட்டு பொருட்களை விற்கும் கடைகளை மூடச் சொல்வது நியாயமானது அல்ல.


'கொரோனா வைரஸ் இப்போ பரவியது; குரங்கு, பறவை, பன்றி காய்ச்சல் எல்லாம் ரொம்ப காலமாக இருக்கிறதே; அவற்றை கட்டுப்படுத்த தவறியது ஏன்...' என, கேட்கத் தோன்றும் வகையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேச்சு: கர்நாடக மாநிலத்தில், அண்மை காலமாக, குரங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் பரவி வருவது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. இதை கட்டுப்படுத்த, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X